
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – tnpsc current affairs dec in tamil – Dec. 27, 2016 (27/12/2016)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்
சுதந்திர போராட்ட வீரர் நினைவாக சிறப்பு தபால் தலை அறிமுகம்
தொலைத்துடர்புத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தபால் துறை, சுதந்திர போராட்ட வீரர் “ஸ்ரீ கயா பிரசாத் கட்டியார்” (Shri gaya Prasad katiyar) அவர்களின் நினைவாக ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
கயா பிரசாத் கட்டியார் பற்றி:
அவர் உத்திர பிரதேசத்திலுள்ள ஜகதிஸ்பூரில் பிறந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகவும் அர்ப்பணித்து பங்குபெற்ற வீரர்களில் ஒன்றாக இவரும் இருந்தார்.
அவர் 1925-ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கூட்டமைப்புடன் இணைந்து சந்திர சேகர் ஆசாத் மற்றும் பகத் சிங் அவர்களுடன் இணைந்தார்.
தலைப்பு : அரசியலறிவியல் – மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு
DAMAN – Durgama Anchalare Malaria Nirakaran
ஒரு புதிய மலேரியா கட்டுப்பாடு நிரலான DAMAN – Durgama Anchalare Malaria Nirakaran திட்டத்தினை 8000 கிராமங்களில் அனைத்து 79 தொகுதிகளிலும் அதிகம் மலேரியா பாதித்த எட்டு மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
மிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டம்
சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பார்பதி கிரி (Parbati Giri) அவர்களின் சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்பு மற்றும் ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு சேவைசெய்ததை நினைவு கூறும் பொருட்டு ஒடிஷா மாநில அரசு மிகப்பெரிய நீர்ப்பாசன ஏற்றம் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.
பார்பதி கிரி பற்றி:
அனாதைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து சுதந்திரப் போராளிகளில் ஒருவராக இருந்தவர் பார்பதி கிரி. இதற்காக அவர் அன்புடன் ஒடிசாவின் மதர் தெரேசா என நினைவுகூறப்படுகின்றார்.
Bargarh மாவட்டத்தில் பிறந்த கிரி, மகளிர் மேம்பாட்டிற்கு அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் மூலம் தனித்துவமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
1942-ல் இந்தியாவின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சேர்ந்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பல பேரணிகளில் கலந்துகொண்டார்.
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
சீனா ஐந்தாவது தலைமுறை போர் ஜெட் விமானத்தை சோதித்தது
உலகின் மிக முன்னேறிய போர் விமானங்கள் செய்ய சீனா அதன் ஐந்தாவது தலைமுறையில் சமீபத்திய பதிப்பான ஸ்டெல்த் போர் விமானத்தை சோதனை செய்தது.
J – 31 ன் புதிய பதிப்பு FC – 31 கைர்பால்கன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய FC-31, சிறந்த திறன்களை கொண்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் ஒரு பெரிய சுமைகளை தாங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more tnpsc current affairs dec in tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily tnpsc current affairs dec in tamil and English on your Inbox.
Read tnpsc current affairs dec in tamil and English. Download daily tnpsc current affairs dec in tamil for TNPSC and Monthly compilation of tnpsc current affairs dec in tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "tnpsc current affairs dec in tamil – Dec. 27, 2016"