Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs Apr 04, 2017

TNPSC Tamil Current Affairs Apr

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs Apr 04, 2017 (04/04/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்

SASECன் 7ஆம் உறுப்பினர் ஆனது மியான்மர்

தெற்காசியாவின் துணை பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (SASEC – South Asia Sub regional Economic Cooperation) கூட்டுறவில் மியான்மார் ஏழாவது உறுப்பினரானாக இணைந்தது.

SASEC பற்றி:

SASEC நாடுகள் – வங்காளம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், நேபால், மற்றும் இலங்கை.

இந்த நாடுகள், போக்குவரத்து இணைப்பு வசதி, வேகமான மற்றும் திறமையான வர்த்தக வசதி ஏற்படுத்தித் கொள்ளுதல் மற்றும் எல்லை தாண்டிய மின்சார வணிகத்திற்கு ஒருங்கிணைந்து செயல்பட்டு செயல் திட்டங்களை உருவாக்கி பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

மியான்மார் இணைப்பு பற்றி:

தெற்காசியாவில் துணை பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (SASEC) திட்டத்தின் பகுதியான ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆனது கிழக்கு நோக்கி விரிவடைந்து மியான்மார்-ரை முறையாக 2017 இல் இவொத்துழைப்பு கூட்டத்தின் ஏழாவது உறுப்பினரானாராக ஏற்றுள்ளது.

மியான்மரில் உள்ள சாலை வழிகள் தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையில் முக்கிய இணைப்புகளை வழங்குகிறது.

இதன்மூலம் இந்திய நிலத்தால் சூழப்பட்ட வடகிழக்கு பகுதிகளுக்கு மியான்மரில் உள்ள துறைமுகங்கள் கூடுதல் நுழைவாயில்களை வழங்குகிறது.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள், யார் இவர்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி

தில்லி உயர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதியான நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏப்ரல் 5 ம் தேதி தலைமை நீதிபதி பதவியேற்கிறார்.

இது பிப்ரவரி 18 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களுக்கு பிறகு இந்த பொறுப்பை இந்திரா பானர்ஜி ஏற்கிறார்.

இந்திரா பானெர்ஜீ பற்றி:

அவர் செப்டம்பர் 24, 1957 அன்று பிறந்த அவர் 1985 இல் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்து கல்கத்தா உயர்நீதிமன்ற அசல் மற்றும் மேல்முறையீட்டு வழக்குகளில் இரண்டு பக்கங்களிலும் பயிற்சி செய்துள்ளார்.

அவர் அப்பதவியை கண்டா குமாரி பட்நாகர் பிறகு ஏற்ற இரண்டாவது பெண்மணி ஆவார்.

அவர் பிப்ரவரி 5, 2002 அன்று கல்கத்தா உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஆகஸ்ட் 8, 2016 அன்று தில்லி உயர் நீதிமன்றதிற்கு மாற்றப்பட்டார்.

_

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம்

காசினியின் மிகப்பெரிய இறுதிப்பகுதி

மிகப்பெரிய இறுதிப்பகுதி (Grand Finale) என்றழைக்கப்படும் காசினியின் கடைசி பணிப்பிரிவு தொடக்கத்தினை உலகிற்கு அறிவிப்பதற்காக ஏப்ரல் 4 ம் தேதி நாசா ஒரு செய்தியாளர் கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

காசினி பற்றி:

நாசாவால் சனி கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஒரு ஆளில்லா விண்கலம் காசினி ஆகும்.

நாசாவின் காசினி விண்வெளியில் கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்களை கழித்த பின்னர், அதன் இறுதி கட்ட நோக்கதிற்கு (கிராண்ட் பினாலே) தயாராக உள்ளது.

காசினி எப்போது தொடங்கப்பட்டது?

காசினி அக்டோபர் 15, 1997 அன்று தொடங்கப்பட்டது.

பூமி, வெள்ளி மற்றும் வியாழன் போன்ற கிரகங்களினை ஆராய்ந்து பிரயாணம் மேற்கொண்ட பிறகு 2004 ஜூன்-ல் சனி கோளை முதன் முதலாக சுற்ற ஆரம்பித்தது.

சனி கிரகத்தின் வளையங்கள் மற்றும் அதன் நிலவுகளை பற்றியும் ஆராய உள்ளது.

இந்த இறுதி சுற்று என்ன செய்ய போகிறது?

இந்த நேரம் வரை உலகிற்கு தெரியாமல் உள்ள சனி கோளை பற்றிய விவரங்களை காசினி சனி பகுதிகளில் ஆராய உள்ளது. அது சனியின் வெளி வளையங்களின் நெருங்கிய தோற்றத்தினை பார்வையிட உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

காசினி ஆனது கிரகங்களின் சுற்றுப்பாதையில் வளையங்களில் உள்ள அறியப்படாத நிலவுகளை முன்பு கண்டுபிடித்துள்ளது. Methone, Pallene, Polydeuces, Daphnis, Anthe மற்றும் Aegaeon ஆகிய நிலவுகள் அடங்கும்.

அதன் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று இன்செலடஸில் (Enceladus) ஆகும். அது சனிக் கோளின் ஈர்ப்பினில் பிணைந்துள்ள பனிக்கட்டி உறைந்த நிலவுகள் ஆகும்.

[/vc_column_text][vc_column_text]

For More TNPSC Tamil Current Affairs Apr Quick Notes and Articles

Visit

https://tnpsc.academy/tnpsc-quick-notes/

 

For More TNPSC Tamil Current Affairs Apr and in English

visit

https://tnpsc.academy/current-affairs

 

Subscribe our newsletter for free to get daily TNPSC Tamil Current Affairs Apr in English and Tamil on your inbox.

 

To Download TNPSC Tamil Current Affairs Apr monthly compilation as pdf in both English and Tamil

visit

https://tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

மேலும் TNPSC நடப்பு நிகழ்வுகளை (current affairs ) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படிக்க

www.tnpsc.academy/currentaffairs

உங்கள் இன்பாக்ஸில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி TNPSC நடப்பு விவகாரங்கள் பெற எங்கள் செய்திமடல் (newsletter) கிளிக் செய்து சந்தாதாரராக இலவசமாக இணைந்திடுங்கள்.

TNPSC மாதாந்திர நடப்பு விவகாரங்கள் தொகுப்பை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய

https://tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version