Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs april 12, 2017

TNPSC Tamil Current Affairs april

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs april 12, 2017 (12/04/2017)

 

Download as PDF

தலைப்பு : பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம்

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

மக்களவை, Human Immunodeficiency Virus (HIV) and Acquired Immune Deficiency Syndrome (AIDS) (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மசோதா 2017-னை நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பலப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டது.

இதனை ராஜ்ய சபா ஏற்கனவே இந்த சட்டவரைவை நிறைவேற்றியுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

நீதிமன்றத்தின் பங்கு:

ஒரு முன்னுரிமை அடிப்படையில் நீதிமன்றத்தால் எச்ஐவி பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய வழக்குகள் அகற்றப்படும்.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட அல்லது தாக்கப்பட்ட நபரால், ஒரு பராமரிப்பு விண்ணப்பம் சம்பந்தமாக எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்யும்போது விண்ணப்பதாரரால் ஏற்படும் மருத்துவ செலவினங்களை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

_

தலைப்பு : மாநிலங்களின் விவரங்கள், செய்திகளில் இடங்கள்

இந்தியாவில் ஹால்டியா துறைமுகம் தூய்மையானது

மத்திய அமைச்சகத்தின் மூலம் நாட்டின் சுத்தமான துறைமுகமாக மேற்கு வங்கத்தின் ஹால்டியா துறைமுகத்தினை (Haldia Port) அறிவித்துள்ளது.

இது அனைத்து முக்கிய இந்திய துறைமுகங்களின் சுத்திகரிப்பு அளவுகள் குறித்து எடுக்கப்படும் முதல் தரவரிசை பட்டியல் ஆகும்.

இந்த வரிசையில் விசாகப்பட்டினம் (Vizagapattinam) துறைமுகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

13 இந்திய துறைமுகங்களின் தரவரிசையை இந்திய தரக் கவுன்சில் (QCI – Quality Council of India) நடத்தியது.

துறைமுக நடவடிக்கைகள், அலுவலக பகுதிகள், டவுன்ஷிப் பகுதி மற்றும் உள்வரும் கப்பல்களுக்கு வெளிவரும் வழி ஆகியவற்றைப் பொறுத்து கழிவுகளை அகற்றும் ஆதாரங்கள் வைத்து இந்த துறைமுகங்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை அமைந்திருந்தது.

_

தலைப்பு: அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், பொது விழிப்புணர்வு

URJA MITRA App

மின்சக்தி அமைச்சக துறை URJA MITRA செயலியை சமீபத்தில் தொடங்கியது.

இதன் மூலம் மின்சாரத்தின் உபயோக விளக்கத்தினை மக்களிடம் குறுந்ததகவல்கள் (sms) மூலம் அனுப்பி குடிமக்களை மேம்படுத்த உதவுகிறது.

இந்த செயலியானது, மாநில மின் விநியோகம் பயன்பாடுகள் மற்றும் மின் பயன்பாட்டு தகவலை சுற்றறிக்கை போன்றவற்றை நகர்ப்புற / கிராமிய மின்சார நுகர்வோர்களுக்கு எஸ்எம்எஸ் அறிவிப்புகள் மூலம் இந்தியா முழுவதும் தெரிவிக்கிறது.

_

தலைப்பு : அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள், பொது விழிப்புணர்வு

புதிய இணையதளம் “நக்க்ஷே – Nakshe” – SOI

இந்தியாவின் சர்வே (SOI- Survey of India), இந்தியர்களுக்கு இலவசமாக திறந்த தொடர் வரைபடங்களை கிடைக்குமாறு “Nakshe” என்ற புதிய வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (Harsh Vardhan) அவர்கள் மூலம் SOI இன் 250 வது ஆண்டு விழாவில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

இது ஆதார் இயக்கப்பட்ட பயனாளிகளின் அங்கீகார செயல்முறை மூலம் 1: 50,000 அளவில் ஒரு PDF வடிவத்தில் 3000 திறந்த தொடர் வரைபடங்கள் (OSM) அல்லது நில வரைபடங்களை இலவசமாக வழங்குகிறது.

நிலப்பரப்பு அல்லது நிலப்பகுதி உட்பட இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட புவியியல் அம்சங்கள் போன்றவையும் இந்த பிரதேச வரைபடங்கள் அல்லது OSM-ல் உள்ளன.

SOI பற்றி:

நாட்டின் முதன்மையான வரைபட நிறுவனமாக SOI உள்ளது.

இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Science and Technology) கீழ் வருகிறது.

SOI நாட்டில் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்து, அதனை வரைபடமாக மாற்றியமைத்துள்ளது.

மற்றும் இந்த வரைபடங்கள் தேசிய வளர்ச்சிக்கு மதிப்புமிக்க இடத்தை அளிக்கின்றன.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version