[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs mar 16, 2017 (16/03/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக நுகர்வோர் தினம் – 15 மார்ச்
சர்வதேச நுகர்வோர் இயக்கத்திலுள்ள ஒற்றுமையை கொண்டாடும் ஒரு வருடாந்த விழா 15 மார்ச்சில் கொண்டாடப்படும் உலக நுகர்வோர் உரிமை தினம் (WCRD) ஆகும்.
ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி முதல் நுகர்வோர் உரிமைகள் வரையறையை நிலைநிறுத்திய 1962 ஆம் ஆண்டின் 15 மார்ச்சினை குறிக்கிறது.
அனைத்து நுகர்வோர் அடிப்படை உரிமைகளை ஊக்குவிக்க ஒரு வாய்ப்பாகவும் அந்த உரிமைகள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவை எனவும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் உரிமை கோரவும் மற்றும் அவற்றின் மரியாதையை கெடுக்கும் வண்ணம் செயல்படும் சந்தை மீறல்கள் மற்றும் சமூக அநீதிகளை கண்டித்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கருப்பொருள் : “ஒரு டிஜிட்டல் உலகில் நுகர்வோர் நம்பிக்கையை பேணுதல்”.
முக்கிய குறிப்புகள்:
1983 மார்ச் 15 முதல் அனுசரிக்கப்பட்ட இந்த WCRD குடிமக்களின் ஒற்றுமை மற்றும் பங்களிப்பை மேம்படுத்த ஒரு முக்கியமான வாய்ப்பாகிவிட்டது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம்
நீல புரட்சிக்காக இளைய மீன்கள் பணி (மிஷன் ஃபிங்கர்லிங்)
மீன்பிடித் துறையின் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை உணர்ந்துகொள்ள, இந்திய அரசு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் நாட்டின் பல்வேறு மூலதனங்களை வெளிக்கொணரும் பொருட்டு “நீல புரட்சி” என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
முக்கிய குறிப்புகள்:
மீன் பிடிப்பவர்கள் மற்றும் மீன் விவசாயிகளின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்காக ஒரு சிறந்த சூழலை உருவாக்கும் பொருட்டு நீலப்புரட்சி தனது நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் தரமான மற்றும் செலவு குறைந்த மீன் விதைகளை உற்பத்தி செய்வதன் மூலமும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் உற்பத்தியினை மேலும் விரிவாக்கம் அடைய செய்ய வேண்டும்.
நீர் நிலைகளில் வெவ்வேறு பிரிவுகளில் தேவையான Fry/PL தயாரிக்க மேலும் அதிக குஞ்சுப்பொரிப்பகத்தினை நிறுவ வேண்டும்.
நீலப்புரட்சியின் கீழ், மீன் உற்பத்தி இலக்குகளை அடைய மீன் ஃபிங்கர்லிங் தயாரிப்பு முறை ஓவர் முக்கியமான காட்சிப்படுத்தும் முறையாகும்.
இந்த திட்டம், பொரிப்பகங்கள் நிறுவனத்திற்கு பணிகளை எளிதாக்கவும் மற்றும் ஃபிங்கர்லிங் வளர்ப்பு குளத்தில் மீன் உற்பத்தியினை எளிதாக்கவும் வழிவகை செய்கிறது.
தலைப்பு : வரலாறு – செய்திகளில் மனிதர்கள், புதிய நியமனங்கள், யார் இவர்?
அமெரிக்க மேல் சட்டசபை சீமாவிற்கு உடல்நல அமைச்சரவை தலைமை பொறுப்பினை கொடுத்துள்ளது
ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் மேல் சட்டசபையில் இந்திய-அமெரிக்கர் சீமா வர்மாவிற்கு உடல்நல அமைச்சரவை தலைமை பொறுப்பினை கொடுத்துள்ளது.
“கேள்விக்கிடமின்றி தகுதி” என வெள்ளை மாளிகையினால் வர்ணிக்கப்பட்ட வர்மா அவர்கள், முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கர் என்பது சட்டசபை மூலம் உறுதி செய்யப்பட்டது.
சீமா பற்றி:
சுகாதார கொள்கை ஆலோசகரான இவர், இந்தியானா உட்பட பல மாநிலங்களில் சுகாதார பராமரிப்பு சீர்திருத்தங்கள் செய்தமைக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.
தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
ஏற்றுமதி திட்டத்திற்காக வர்த்தக உள்கட்டமைப்பு – Trade Infrastructure for Export Scheme (TIES)
நாட்டில் ஏற்றுமதி ஊக்குவிக்கும் பொருட்டு மாநிலங்களில் ஏற்றுமதி இணைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை வளர்க்க அரசு, ஏற்றுமதி திட்டத்திற்காக வர்த்தக உள்கட்டமைப்பு – Trade Infrastructure for Export Scheme (TIES) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சில குறிப்புகள்:
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பணியினருக்கு முன்னாலும் பின்னாலும் தொடர்புகளைக் வழங்கவும் உள்கட்டமைப்பு இடைவெளியை நீக்க ஒரு பாலமாகவும் இருக்க TIES என்ற ஒரு திட்டத்தினை வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
இந்த திட்டமானது, சுங்க சாவடிகளில் இணைப்புகளாகவும் மைல் கற்கள் இணைப்புகளாகவும் எல்லை பாதுகாப்பாகவும் மற்றும் ஒருங்கிணைந்த பதிவுகள் போன்ற திட்டங்களில் கவனத்தை செலுத்துகிறது.
_
தலைப்பு : வரலாறு – செய்திகளில் மனிதர்கள், புதிய நியமனங்கள், யார் இவர்?
அசாமின் புதிய Upalokayukta (உபலோக்ஆயுக்தா)
அசாம் ஆளுநர் பன்வரிலால் புரோகித் (Banwarilala Prohit) மூலம் நீதிபதி சித்தரஞ்சன் சர்மா (Chitharanjan Sharma) அசாமின் புதிய Upalokayukta ஆக பதவியேற்றார்.
நீதிபதி சர்மா அவர்கள், குவாஹாத்தி உயர் நீதிமன்றதின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர்.
உபலோக்ஆயுக்தாவின் பணி:
இது இந்திய மாநிலங்களில் ஒரு எதிர்ப்பு ஊழல் தடுப்பு அமைப்பு ஆகும்.
வருமான வரி துறை மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து லோக் ஆயுக்தா, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் உள்ள ஊழலை விளம்பரப்படுத்த மக்களுக்கு முக்கியமாக உதவுகிறது.
1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா மற்றும் உபலோக்ஆயுக்தா சட்டத்தின் மூலம் லோக்ஆயுக்தாவை நிறுவிய அறிமுகப்படுத்திய முதல் அரசாக மகாராஷ்டிரா இருந்தது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL Current Affairs mar and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs mar and inEnglish on your Inbox.
Read TNPSC TAMIL Current Affairs mar and in English. Download daily TNPSC TAMIL Current Affairs mar and in English.
Monthly compilation of TNPSC TAMIL Current Affairs mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]