Site icon TNPSC Academy

TNPSC TAMIL Current Affairs mar 21, 2017

TNPSC TAMIL Current Affairs mar

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs mar 21, 2017 (21/03/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

சுரங்கங்கள் சந்தை 2017

சர்வதேச வைர மாநாடு “சுரங்கங்கள் சந்தை 2017” இந்தியாவில் நடைபெற்றது.

முக்கிய குறிப்புகள்:

இந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் இந்த சர்வதேச வைர கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள முன்னணி சுரங்க உறுப்பினர்கள், வைர விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு இம்மாநாடு நடைபெற்றது.

மேலும் இம்மாநாட்டில் உலக வைர தொழில்துறை மேற்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை பற்றி விவாதிக்கவும் அதற்கான வழிமுறைகளை தேடவும் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்படுகிறது.

இம் மாநாட்டில் சுரங்க நாடுகளில் இருந்து பல்வேறு அமைச்சர்கள், சுரங்க தொழில் நிறுவனங்களில் இருந்து பிரதிநிதிகள், சிறிய மற்றும் ஆடம்பர பிராண்ட்களின் தலைமை வகிப்பவர்கள், பல்வேறு வங்கிகளின் வைர வியாபாரிகள் மற்றும் டயமண்ட் தொழிலில் மற்ற முக்கிய பிரமுகர்கள் போன்ற அனைவரும் பங்கு பெற்றனர்.

பின்னணி:

இந்தியா உலகின் மிகப்பெரிய வெட்டு மற்றும் பளபளப்பான வைரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.

இதன் உற்பத்தியில் 93% ஏற்றுமதி செய்யப்படுகிறது.

_

தலைப்பு : அரசியலறிவியல் – பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம்

கங்கை மற்றும் யமுனா நதிகள் வாழும் நபர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய நாட்டில் முதல் முறையாக கங்கை மற்றும் யமுனா ஆறுகளை உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் சட்டரீதியாக “வாழ்ந்து கொண்டிருக்கும் நபர்கள்” என அறிவித்துள்ளது.

மார்ச் 15 அன்று, நியூசிலாந்தில் உள்ள நதி Whanganui க்கு உலகிலேயே முதன் முதலாக சட்டரீதியாக மனித அந்தஸ்து அந்நாட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

கங்கை மற்றும் யமுனை நதிகள் மற்றும் அதன் கிளைகள், நீரோடைகள் அனைத்தையும் மனிதருடன் தொடர்புடைய உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் கொண்ட சட்ட நபர்கள் அல்லது வாழும் நிறுவனங்கள் என்று சட்ட ரீதியாக அரசு அறிவித்துள்ளது.

கங்கை நதி மற்றும் யமுனை நதிகளை பாதுகாத்து அதன் வளத்தை சேமித்திடவும் இந்த ஆறுகள் “வாழும் நபர்கள்” என அரசு அறிவித்துள்ளது.

ஒரு வாழும் நிறுவனம் என நதிகளை அங்கீகரிப்பது அவர்களுக்கு புதிய சட்ட அடையாளத்தையும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அமைக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது.

இந்த நடவடிக்கையை அரசு எதனால் அத்தியாவசியமாக்கியது?

பல அரசாங்க முனைப்புகள் எடுத்தாலும் கூட ஆறுகள் இருவரும் புறக்கணிப்பு நிலையில் தான் உள்ளன.

ஆறுகளின் மறுசீரமைப்புக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் நமாமி கங்கா வேலைத்திட்டம் மூலம் அதன் இலக்கு இன்னும் அடையப்படவில்லை.

1500 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஒவ்வொரு நாளும் கங்கையில் கலப்பதாக உள்ளது.

இந்த கழிவுநீருடன் ஆற்றங்கரையினில் அமைந்துள்ள 700 க்கும் மேற்பட்ட மிகவும் மாசுபடுத்துகின்ற தொழிற்சாலைகளால் கொட்டப்படுகின்ற தொழில்துறை கழிவு 500 மில்லியன் லிட்டர் உடன் இணைகிறது.

வழி நடத்தல்:

நீதிமன்றம் ஆனது, நமாமி கங்கா திட்டத்தின் இயக்குநர், உத்தரகண்ட் தலைமை செயலாளர், உத்தர்கண்டில் வழக்கறிஞர் ஜெனரல் ஆகியோர்களை இந்த ஆறுகளுக்கு இவர்கள் அனைவரும் “பெற்றோர்கள்” போல சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மற்றும் மனிதர்களும் ஆறுகள் மற்றும் அவர்களின் கிளை நதிகளை “protect, conserve and preserve” “பாதுகாக்கல், சேமித்தல் மற்றும் எதிகாலத்திற்கு பாதுகாக்கல்” ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டும்.

_

தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்

தமிழ்நாடு விஜய் ஹசாரே கோப்பையை வென்றது

கிரிக்கெட்டில், தமிழ்நாடு, ஐந்தாவது முறையாக உள்நாட்டு 50 ஓவர் போட்டியில் விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது.

இதன் இறுதி போட்டி தில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டில், 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வங்காளத்தை தோற்கடித்தது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC TAMIL Current Affairs mar and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs mar and inEnglish on your Inbox.

 

Read TNPSC TAMIL Current Affairs mar and in English. Download daily TNPSC TAMIL Current Affairs mar and in English.

Monthly compilation of TNPSC TAMIL Current Affairs mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version