Site icon TNPSC Academy

TNPSC TAMIL Current Affairs MAR 24, 2017

TNPSC TAMIL Current Affairs MAR

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs MAR 24, 2017 (24/03/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

உலக காசநோய் தினம் 2017

உலக காசநோய் தினம், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது.

உலகளாவிய தொற்றுநோயான காசநோய் பற்றியும் மற்றும் அதனை நீக்க முயற்சிகள் எடுப்பது பற்றியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறதுது.

டாக்டர் ராபர்ட் கோச் (Dr. Robert Koch) அவர்கள் 1882 ஆம் ஆண்டில் இந்த நாளில்தான் நீங்காத காசநோய் மற்றும் காசநோய் பேசில்லஸ் ஆகியவற்றின் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது என அறிவித்து ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தையே ஆச்சிரியப்பட வைத்தார். அதன் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

அவரின் இக்கண்டுபிடிப்பு காசநோய் குணப்படுத்துவதற்கு வழி திறந்து மருந்து கண்டறிவதற்கு உதவியது.

உலக காசநோய் தினத்தின் கருப்பொருள் 2017 : “காசநோயை ஒழிக்க இணையுங்கள்”.

முக்கிய குறிப்புகள்:

“மலிவு மற்றும் தரமான சுகாதாரத்தினை மக்களுக்கு உறுதி செய்வதை அரசாங்கம் சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறது. மேலும் காசநோய் மரணங்கள் அளவை முற்றிலுமாக குறைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதனால் 2025 இல் காசநோயை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் மீண்டும் எங்களது திட்டங்களை திருத்தி அமைத்து அதனில் கடுமையாக உழைத்து இலக்கினை அடைவோம்” என சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் ஸ்ரீ ஜே பி Nadda மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

_

தலைப்பு : வரலாறு – செய்திகளில் நபர்கள்

தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபலமாக அசோகமித்திரன் என அழைக்கப்படும் தியாகராஜன் சென்னையில் காலமானார்.

அவரை பற்றி :

ஜெகதீச தியாகராஜன் ஆந்திரப் பிரதேசதிலுள்ள செகந்தராபாத்தில் செப் 22, 1931 இல் பிறந்தார்.

அவர் தனது இலக்கிய வாழ்க்கையைத் தனது பரிசு பெற்ற நாடகம் “அன்பின் பரிசு” உடன் தொடங்கினார்.

அவரது பேனா பெயர் (புனைப்பெயர்) “அசோகமித்திரன்” ஆகும்.

அவரது “அப்பாவின் சிநேகிதர்கள்” என்ற தனது சிறுகதைகளின் சேகரிப்புக்காக அவர் சாகித்ய அகாடெமி விருதை வென்றார்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

86வது தியாகிகள் தினம் – மார்ச் 23 – பகத் சிங், சுக்தேவ் மற்றும் சிவராம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 தியாகிகள் தினம் (Shaheed Diwas) அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் (ஷாஹீத் பகத் சிங், சுக்தேவ் தாபர் மற்றும் சிவராம் ஹரி ராஜ்குரு) இறந்த நாளினை நினைத்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்

தேசிய புகைப்பட விருதுகள் 2017 – ரகு ராய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புகைப்பட பத்திரிகையாளர் ரகு ராய் (Raghu Rai) அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை (I & B) அமைச்சர் திரு வெங்கையா நாயுடு மூலம் வழங்கப்பட்டது.

ரகு ராய் பற்றி:

ஸ்ரீ ரகு ராய் 1965 ல் 23 வயதில் ஒரு புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ராய் ஒரு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

1992 ஆம் ஆண்டில், அவர் “ஆண்டின் புகைப்படக்காரர்” விருது அமெரிக்கா மூலம் வழங்கப்பட்டது.

மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தால் “officiere des Arts et des Letters (கலை மற்றும் கடிதங்கள் அதிகாரி)” என்ற விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய புகைப்பட விருதுகள் விழாவில் மற்ற விருது பெற்றவர்கள்:

கேரளாவின் த்ரிசசூரிலிருந்து வந்துள்ள K.K Mustafah “ஆண்டின் தொழில்முறை புகைப்படக்காரர் – Professional Photographer of the year” விருதை பெற்றார்.

தில்லியின் Shakarpuவில் இருந்து வந்துள்ள ரவீந்தர் குமார் அவர்கள் “ஆண்டின் தன்னார்வ புகைப்படக்காரர் – Amateur Photographer of the year” விருதை பெற்றார்.

முக்கிய குறிப்புகள்:

ஆறாவது தேசிய புகைப்பட விருதுகள் வழங்கும் விழாவினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பிரதமர் “மகள்களுடன் SELFIE” என்ற பிரச்சாரத்தை சமூக நடத்தை மற்றும் கலாச்சார மரபுகள் நன்கு ஆழமாக மக்கள் மனதில் பதிந்து ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை உருவாக்கும் பொருட்டு தொடங்கிவைத்தார்.

மொத்தம் 13 விருதுகளை இந்த புகைப்பட விருதுகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் வாழ்நாள் சாதனையாளர் விருது, தொழில்முறை மற்றும் தன்னார்வ பிரிவில் ஆண்டு விருது புகைப்படக்காரர், மற்றும் இதன் இரண்டு வகை ஒவ்வொன்றிலும் 5 சிறப்புக் குறிப்பு விருதுகள் ஆகியவை அடங்கும்.

_

தலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள், சமீபத்திய நிகழ்வுகள்

உலக பாரம்பரிய இடங்களின் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன என மத்திய அரசால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஐந்து இந்திய நகரங்கள் – புவனேஸ்வர், அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை மற்றும் தில்லி.

_

தலைப்பு : வரலாறு – இந்தியாவின் கலாச்சார விழாக்கள்

ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோட்சவ் – தேசிய கலாச்சார விழா

கலாச்சார அமைச்சகம் 5வது தேசிய கலாச்சார விழாவினை (ராஷ்ட்ரிய சமஸ்கிருத மஹோட்சவ்) 2017 இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் மார்ச் 23-31, 2017 ல் ஏற்பாடு செய்து உள்ளது.

அருணாச்சல பிரதேச மற்றும் நாகாலாந்து ஆளுநர் ஸ்ரீ பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சார்யா மூலம் இந்த 9 நாட்கள் கலாச்சார திருவிழா தொடங்கி வைக்கப்படும்.

இந்திய கலாச்சாரத்தின் தனித்தன்மை மற்றும் பன்முகத்தன்மையினை காண்பிக்க இந்த தேசிய கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தேசிய ஒருங்கிணைப்பு வலுப்படுத்த மாநிலங்களில் மத்தியில் கலாச்சார இணைப்புகளை ஏற்படுத்தி மேலும் ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.

இந்த தேசிய கலாச்சார விழாவினை முன்னெடுத்து நிறைவேற்றுவது ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படும் வட கிழக்கு மண்டல கலாச்சார மையம், Dimapurhas ஆகும்.

_

தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்

ஐபிசி தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2017 இல் இந்தியா 8 பதக்கங்கள் வென்றது

Fazza சர்வதேச ஐபிசி தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் 9வது பதிப்பு துபாயில் நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டில், 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் மொத்தம் 8 பதக்கங்கள் வென்றனர்.

பதக்கம் வென்றவர்கள்:

ஈட்டி எறிதல் F-46 மற்றும் தட்டு எறிதல் F-46 ஆகிய இரு போட்டிகளிலும் சுந்தர் சிங் குர்ஜார் (Sundar Singh Gurjar) தங்கம் வென்றார்.

நரேந்தர் ரன்பீர் (Narender Ranbir) ஆண்கள் ஈட்டி எறிதல் F-44 பிரிவில் தங்கம் வென்றார்.

பிற பதக்கம் வென்றவர்கள்:

400m ஆண்கள் T-42/44/46 பிரிவில் ஆனந்தன் குணசேகரன் வெள்ளி வென்றார்.

800m ஆண்கள் T-13/20 பிரிவில் ராம்கரன் சிங் (Ramkaran singh) வெண்கலம் வென்றார்.

Shotput ஆண்கள் F-40/41/42 பிரிவில் சுர்ஜித் சிங் (Surjit Singh) வெண்கலம் வென்றார்.

400m ஆண்கள் T-11/12/13 பிரிவில் ரோஹித் வெண்கலம் வென்றார்.

மற்றும் பிரமோத் கே யாதவ் (Pramod K Yadav) 400m ஆண்கள் T-42/44/46 பிரிவில் வெண்கலம் வென்றார்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC TAMIL Current Affairs MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs MAR and inEnglish on your Inbox.

 

Read TNPSC TAMIL Current Affairs MAR and in English. Download daily TNPSC TAMIL Current Affairs MAR and in English.

Monthly compilation of TNPSC TAMIL Current Affairs MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version