Site icon TNPSC Academy

TNPSC TAMIL Current Affairs MAR 25, 2017

TNPSC TAMIL Current Affairs MAR

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs MAR 25, 2017 (25/03/2017)

 

Download as PDF

தலைப்பு : பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு

பாரக் ஏவுகணையானது ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

இந்தியக் கடற்படை குறுகிய கால surface-to-air missile பாரக் ஏவுகணையை (Barack Missile) விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது.

அரேபியக் கடலில் ஏவப்பட்ட குறைந்த உயரத்தில் பறக்கும் அதிவேக இலக்குடைய ஏவுகணைக்கு எதிராக செயல்பட்டு அதனை தகர்த்தி எரித்தது.

இந்தியக் கடற்படை அதிகாரிகள் பாராக் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கினை அழித்ததை உறுதி செய்துள்ளனர்.

இந்த பாரக் வகுப்பு ஏவுகணைகள் கூட்டாக இஸ்ரேல் மற்றும் இந்தியா மூலம் உருவாக்கப்படுகிறது.

_

தலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள்

உலகப் பொருளாதார மன்றத்தின் கட்டிடக்கலை செயல்திறன் ஆற்றல்-ல் இந்தியா 87வது இடம்

சமீபத்தில் ஜெனீவா சார்ந்த உலகப் பொருளாதார அரங்கின் (WEF) உலக ஆற்றல் கட்டிடக்கலை செயல்திறன் குறியீட்டு (Global energy architecture performance index) வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை பற்றி:

2013 முதல் Energy Architecture Performance Index (EAPI) ஒரு மொத்த குறியீடாக தொகுக்கப்பட்டுள்ளது,.

அந்த குறிப்பிட்ட குறிகாட்டிகள் 127 நாடுகளின் ஆற்றல் அமைப்பின் செயல்திறன் அளவினை கண்காணிக்க கவனம் செலுத்துகிறது.

இந்த அறிக்கை 18 காரணிகள் அடிப்படையில்  ‘energy triangle’ன் மூன்று பக்கங்களையும் பொறுத்து வரையறுக்கப்படுகிறது. அவையாவன பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு, சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் ஆற்றல் அணுகல் மற்றும் பாதுகாப்பு முறை.

இந்திய அறிக்கை:

இந்த ஆண்டு 87 வது இடத்திற்கு அடைந்து தனது நிலையில் இந்தியா சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியா 90 வது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி உள்ளது.

உலகில் மாசு நிறைந்த நாடுகளில் இந்தியா மோசமான ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா EAPI, மின்சாரம் உற்பத்தியில் இருந்து CO2 வெளியேற்றம் மற்றும் PM2.5 நிலைகள் (முறையே 117 வது மற்றும் 123 வது) போன்றவற்றில் மிகவும் குறைந்த தரவரிசையை பெற்றுள்ளது.

உலக சூழ்நிலை:

சுவிச்சர்லாந்து வருடாந்திரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து நார்வே, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் ஐந்து இடத்தில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக, ஆற்றல் அதிகம் செலவிடும் சில நாடுகளான சீனா (95 வது), இந்தியா, ஜப்பான் (45 வது), ரஷியன் கூட்டமைப்பு (48) மற்றும் அமெரிக்கா (52 வது) போன்றவை தரவரிசையில் குறைந்துள்ளன அல்லது குறு லாபங்களை மட்டுமே அடைந்துள்ளன.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள், உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

சுற்றுச்சூழல் உலக மாநாடு (World Conference on Environment)

இந்திய குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் ‘சுற்றுச் சூழல் உலக மாநாடு’னை புது தில்லியில் மார்ச் 25, 2017 அன்று துவங்கி வைத்தார்.

இந்த மாநாடு ஆனது தேசிய பசுமை தீர்ப்பாயம் (Natinal Green Tribunal) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மன்றம் உலகளாவிய அக்கறைக்கு சான்றாக உள்ள சுற்றுச் சூழல் பிரச்சனைகள் பற்றி பரந்த விவாதங்களை மேற்கொள்ள இது வழிவகுக்கிறது.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள், உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

இந்தியா உலக வங்கியுடன் “உத்தரகண்ட் சுகாதார அமைப்பின் மேம்படுத்திடுதல் திட்டம்”க்காக பொருளாதார ஒப்பந்தம்

உத்தரகண்ட் சுகாதார அமைப்பின் மேம்படுத்திடுதல் திட்டத்திற்காக இந்தியா உலக வங்கியுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்துள்ளது.

உத்தரகண்ட் சுகாதார அமைப்பு மேம்படுத்துதல் திட்டம்:

தரமான சுகாதார சேவைகளில் பயன்படுத்த அணுகலை மேம்படுத்த இந்த செயல்திட்டம் தனது நோக்கத்தைக் கொண்டுள்ளது.

குறிப்பாக மாநிலத்தின் மலைப்பாங்கான மாவட்டங்களில் மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு சுகாதார நிதியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

இந்த திட்டம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

(i) தனியார் துறை ஈடுபடுதலால் நடவடிக்கைகள் (ii) காப்பாளர் மற்றும் அமைப்பு மேம்பாடு.

_

தலைப்பு : வரலாறு – பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு

பாதுகாப்பு அமைச்சர் டிஆர்டிஒவின் தயாரிப்புகளை கடற்படையிடம் ஒப்படைத்தார்

பாதுகாப்பு, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று கடற்படை அமைப்புகளை கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா (Sunil Lanba) அவர்களிடம் ஒப்படைத்தார்.

அமைச்சர் மேலும் டிஆர்டிஒவால் தயாரிக்கப்பட்ட மற்ற இரண்டு தயாரிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அவை ஐபி அடிப்படையிலான பாதுகாப்பான தொலைபேசி மற்றும் காலியம் நைட்ரைடு டெக்னாலஜி.

கடற்படை கருவிகள்:

USHUS-II நீர்மூழ்கி சோனார், கியர் இயக்குதலுக்கான ஹல் மவுண்டட் சொனார் கற்றை மற்றும் RLG சார்ந்த இயக்க ஊடுருவல் முறையிலான கப்பல் பயன்பாடுகள் (INS-SA) ஆகிய கடற்படை அமைப்புகள் இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காலியம் நைட்ரைடு தொழில்நுட்பம்:

அடுத்த தலைமுறை ரேடாருடன் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் லைட் காம்பாட் விமானங்களில் பயன்படுத்தபடுகிறது.

பாதுகாப்பான IP தொலைபேசி:

ஆயுதப்படையின் தந்திரோபாய திட்டங்களை மூலோபாய தொடர்புகொள்ளுதலில் குரல் மற்றும் தரவுகளை ரகசியமான பாணியில் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC TAMIL Current Affairs MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs MAR and inEnglish on your Inbox.

 

Read TNPSC TAMIL Current Affairs MAR and in English. Download daily TNPSC TAMIL Current Affairs MAR and in English.

Monthly compilation of TNPSC TAMIL Current Affairs MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version