[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR 27, 2017 (27/03/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்
பூமி நேரம்
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் “பூமி நேரம்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இவ்வகையில் 10வது பூமி நேரம் மார்ச் 25 அன்று அனுசரிக்கப்பட்டது.
பூமி நேரம் என்றால் என்ன?
பூமியில் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தட்பவெப்ப நிலை மாற்றத்தினை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு அணைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்படும்.
இதனால் மின்னாற்றல் சேமிக்க படுவதுடன் ஒலிசார் மாசடைதல் குறைய வழிவகுக்கும்.
உலகம் முழுவதும் உள்ள 172 நாடுகளிலுள்ள சுமார் 7000 நகரங்கள் இதில் பங்குபெற்றன.
இதன் பின்னணி:
2007 ல் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற விளக்குகளை அணைக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து பின்னர் இது 7000 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் உலகளாவிய நகரங்கள் இந்நிகழ்வில் ஈடுபட இது விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.
புவி நேரம் எதற்கு வேண்டும்?
கடந்த ஒன்றுக்கு மேற்பட்ட சகாப்தத்தில் அறிவியல் நிகழ்வுகளை புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பிரதானமாக இருந்து மாற்றியுள்ளன.
உலகின் எந்நேரமும் உயரும் மக்கள் தொகை கொண்ட நிலையுடன் மற்ற இனங்களுடன் இணைந்து மனித இனத்திற்கும் ஒரு பெரிய ஆபத்தினை இந்த காலநிலை மாற்றம் கொண்டு செல்கிறது.
இந்த பூமி நேரத்துடன் WWF உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்நிகழ்வில் ஈடுபடவும் மேலும் நிலையான ஒரு வாழ்க்கையை வாழ கற்று கொள்ளவும் இது நோக்கமாக கொண்டுள்ளது.
தலைப்பு : வரலாறு – பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு
இந்தியக் கடற்படையிலிருந்து TU 142M அதிகாரப்பூர்வமாக செயலிழக்க செய்யப்படுகிறது
இந்தியக் கடற்படையின் TU142M, நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம் அதன் 29 ஆண்டுகள் சேவைக்குப்பிறகு அதிகாரப்பூர்வமாக செயலிழக்க செய்யப்படுகிறது.
இந்த விமானம் பற்றி:
TU142M நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பெறப்பட்டு 1988ல் கோவாவிலுள்ள தபோலிம்-ல் இந்தியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் இந்த விமானம் 1992ல் ஐஎன்எஸ் ராஜாளிக்கு (INS Rajali) நிரந்தரமாக மாற்றப்பட்டது.
அதன் பின்னர் இந்திய கடற்படையின் மிகவும் வல்லமைமிக்க LRMR ASW (லாங் ரேஞ்ச் கரையோர உளவு மற்றும் எதிர்ப்பு நீர்மூழ்கி போர்) விமானம் ஆக மாறியது.
இந்த விமானம், அனைத்து முக்கிய கடற்படைப் பயிற்சிகளில் பங்கெடுப்பதன் மூலம் அதன் தனித்துவத்துமான நடவடிக்கைகள் மூலமும் இந்தியக் கடற்படைக்கு பெருமை தேடி தந்துள்ளது.
மற்றும் இந்த விமானம் மாலத்தீவில் நடைபெற்ற ‘காக்டஸ்’ செயல்பாட்டில் பங்கேற்றது.
மற்றும் இலங்கை செயல்பாட்டு தூதரகங்களில் கலந்து கொண்டு வான்வழி கண்காணிப்புக்கு உதவி வழங்கியுள்ளது.
_
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்
விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை கண்டுபிடித்துள்ளனர்
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள்.
சில குறிப்புகள்:
சைன் லைட் (Synlight) என அழைக்கப்படுகிற இந்த ஒளி அமைப்பு, இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர்.
இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது, சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை விமான போக்குவரத்து மற்றும் ராக்கெட் துறையில் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
_
தலைப்பு : வரலாறு – செய்திகளில் நபர்கள், புதிய நியமனங்கள்
எல்லைப் பாதுகாப்புப் படை – முதல் பெண் அதிகாரி – தனுஸ்ரீ பரீக்
மத்தியப் பிரதேசத்தில் Tekanpur-ல் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் நடத்தப்பட்ட ஒரு பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதன் முதல் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார்.
BSF அகாடமியில் நடைபெற்ற அணிவகுப்புக்கு தலைமைதாங்கிய, ராஜஸ்தானில் இருந்து வந்துள்ள தனுஸ்ரீ பரீக் முதல் பெண் துறை அதிகாரியாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நியமிக்கப்பட்டார்.
தனுஸ்ரீ. BSF அகாடெமியில் 52 வாரம் உதவியாளர் கமாண்டன்ட் பயிற்சி திட்டத்தில் 40 வது தொகுதி உடன் கடந்த ஆண்டு தனது பயிற்சியை தொடங்கினார்.
_
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
750 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு பெரிய பழுப்பு நிற குறு கிரகம்
நமது அண்டத்தின் வெளிப்புறபகுதியில் 750 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள வியாழன் போன்ற சுமார் 90 மடங்கு பெரிதாக உள்ள ஒரு பெரிய பழுப்பு நிற குறு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பழுப்பு நிற குறு கிரகங்கள், கிரகங்கள் மற்றும் முழுமையாக நீள நட்சத்திரங்களுக்கு இடையே தொடர்புடன் இருக்கிறது.
இந்த குறு கிரகம், ஹீலியம் ஹைட்ரஜனின் முழு அணுக்கரு இணைவு நடைபெறுவதற்கு மிகவும் சிறியதாக உள்ளது. (ஆற்றலின் விளைவாக வெளியீட்டில்).
ஆனால் அவைகள் கிரகங்களை விட வழக்கமாக குறிப்பிடத்தக்க அளவில் பெரிதாக உள்ளன.
அது எப்படி கண்டெடுக்கப்பட்டது?
இந்த எல்-வகை தனித்த குறு கிரகத்தை அதன் ஆப்டிகல் மற்றும் அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
மேலும் இது ஐரோப்பிய தெற்கு அவதான ‘மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) மூலம் அளவிடப்பட்டு வருகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and inEnglish on your Inbox.
Read TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English. Download daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English.
Monthly compilation of TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]