[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR 28, 2017 (28/03/2017)
தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்
உலக குளிர்கால விளையாட்டு 2017 World Winter Games (Special Olympics Games)
சிறப்பு ஒலிம்பிக் என்றழைக்கப்படும் உலக குளிர்கால விளையாட்டு 2017 ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
1993லிருந்து அமெரிக்காவிற்கு வெளியே நடைபெற்ற முதன் முதல் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் உலக குளிர்கால விளையாட்டு ஆஸ்திரியாவில் நடைபெற்றது.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் என்றால் என்ன?
அறிவுசார் குறைபாடுகளுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர்களுக்காக சிறப்பு ஒலிம்பிக் தடகள போட்டிகள் நடத்தப்படுகிறது.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைகால விளையாட்டுகள் மற்றும் சிறப்பு ஒலிம்பிக்ஸ்க்கு உலக குளிர்கால விளையாட்டுகள் என இந்த போட்டிகள் ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை நடைபெறுகிறது.
இந்திய பங்களிப்பு:
ஆஸ்திரியா சிறப்பு ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 73 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 37 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி மற்றும் 26 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
பின்னணி:
சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிகள், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி அவர்களின் சகோதரியான Eunice Kennedy Shriver அவர்களின் சிந்தனையில் உருவானது ஆகும்.
ஷ்ரிவர் தனது வீட்டின் பின் புறத்தில் அறிவுசார் குறைபாடுகளுள்ள குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கும் பொருட்டு விளையாட்டு போட்டிகளை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
அதன்பிறகு இவர் முதல் சிறப்பு ஒலிம்பிக் உலக போட்டிகளை 1968 ல் சிகாகோவில் ஏற்பாடு செய்தார்.
அப்போட்டியில் ஏறத்தாழ 1,000 வீரர்கள் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிருந்து பங்கேற்றனர்.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
சூறாவளி டெப்பி (Debbie)
ஒரு சக்திவாய்ந்த சூறாவளி Debbie வடகிழக்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் மையம் கொண்டுள்ளது.
இதன் மூலம் அப்பகுதிகளில் பயங்கரமான சேதங்கள், பேய் மழை மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் மின் வெட்டுக்கள் மூலம் பாதிப்படைந்துள்ளன.
_
தலைப்பு : வரலாறு – செய்திகளில் மனிதர்கள், யார் இவர்?
வனிதா குப்தா லீடெர்ஷிப் கூட்டத்தின் தலைமை அதிகாரியாக நியமனம்
இந்திய-அமெரிக்கரான வனிதா குப்தா, ‘சிவில் மற்றும் மனித உரிமைகள் தலைமை மாநாடு‘-ட்டின் தலைவர் மற்றும் CEO வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த அமைப்பின் மதிப்புமிக்க பதவியின் தலைமை பொறுப்பையேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் வனிதா குப்தா பெறுகிறார்.
இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக பதவியில் இருந்த வேட் ஹென்டர்சன் (Wade Henderson) அவர்களை பின்தொடர்ந்து இந்த பதவியை இவர் ஏற்கிறார்.
இவர் வரும் ஜூன் 1, 2017 அன்று தனது புதிய பணியினை தொடங்குகிறார்.
சிவில் மற்றும் மனித உரிமைகள் தலைமை மாநாடு பற்றி:
தலைமை மாநாடு என்றழைக்கப்படும் சிவில் மற்றும் மனித உரிமைகள் தலைமை மாநாடு வாஷிங்டன்னில் 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
_
தலைப்பு : வரலாறு – செய்திகளில் நபர்கள், யார் இவர்?
ஜூரிஸ்ட் டிஆர் அந்தியர்ஜுனா காலமானார்
மூத்த வழக்கறிஞர் மற்றும் சிறந்த நீதியாளர் Tehmtan R அந்தியர்ஜுனா காலமானார். அவர் 1998 வரை 1996 முதல் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார்.
_
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்
டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதுகள் மற்றும் ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருதுகள்
இந்தியா குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள், 2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான டாக்டர் பி சி ராய் தேசிய விருதுகள் மற்றும் 2008, 2009, 2010, 2014, 2015, 2016ம் ஆண்டுக்கான ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருதுகள் ஆகியவற்றை மார்ச் 28, 2017 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
டாக்டர் பி.சி. ராய் விருதுகள் பின்வரும் ஒவ்வொரு வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது:
Statesmanship of the Highest Order in India,
Medical man-cum-Statesman,
Eminent Medical Person,
Eminent person in Philosophy,
Eminent person in Science
and Eminent person in Arts.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் மதிப்புமிக்க டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதும் மற்றும் இரண்டு நபர்கள் $ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருதையும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விருதுெபறவர்களின் விவரங்கள்:
டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதுகள்:
எஸ் கீதாலட்சுமி (Geethalakshmi) – தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள இவருக்கு 2016ல் சமூக மருத்துவம் நிவாரண துறையில் (socio medical relief) அளித்த சேவைகளுக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது.
சி பழனிவேலு (Palanivelu) – கோயம்புத்தூர் சார்ந்த ஜிஇஎம் மருத்துவமனையில் தலைவரான இவருக்கு 2015க்கான மருததுவப் நபர் (eminent medical person category) பிரிவில் தனது சிறந்த பங்களிப்பிற்காக இவ்விருதினை பெற்றார்.
இவர் இவ்விருதினை இரண்டாவது முறையாக பெறுகிறார்.
அவர் 2006 ஆம் ஆண்டில் சிறப்பு வளர்ச்சி பிரிவில் (speciality development category) முதல் முறையாக இவ்விருதினை பெற்றார்.
ஆனந்த் கே காகர் (Anand K. Khakhar) – சென்னையில் அப்போலோ மருத்துவமனையிலுள்ள கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சை மையத்தின் திட்ட இயக்குனரான இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
2015ம் ஆண்டில் மருத்துவ பிரிவில் வெவ்வேறு கிளைகளில் சிறப்பு வளர்ச்சிக்கு ஊக்கமளித்தற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருதுகள்:
எஸ் ராஜசேகரன் (S. Rajasekaran) – கோயம்புத்தூரின் கங்கா மருத்துவமனையின் எலும்பு மருத்துவ துறை தலைவரான இவருக்கு 2008ம் ஆண்டின் ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
பி சுந்தரேசன் (P. Sundaresan) – மதுரையில் உள்ள அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மரபியல் துறையின் மூத்த விஞ்ஞானியும் மற்றும் தலைவரும் ஆன இவருக்கு 2010ம் ஆண்டின் ஹரி ஓம் ஆசிரமம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and inEnglish on your Inbox.
Read TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English. Download daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English.
Monthly compilation of TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]