[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR 30, 2017 (30/03/2017)
தலைப்பு : வரலாறு – தேசியம், சமீபத்திய நிகழ்வுகள்
இந்தியா முதல் முறையாக மின்சார நிகர ஏற்றுமதியாளர் ஆகிறது
மத்திய மின் ஆணையம் படி, இந்திய அரசின் நியமிக்கப்பட்ட அதிகார பூர்வமான எல்லை தாண்டிய மின்சார வர்த்தகத்தில் முதன் முதலாக இந்தியா, மின்சாரம் நிகர இறக்குமதியாளரிலிருந்து மின்சாரம் நிகர ஏற்றுமதியாளர் ஆகியுள்ளது.
நடப்பு ஆண்டில் 2016-17 (ஏப்ரல் பிப்ரவரி 2017 காலத்திற்கு முன்பு), நேபால், வங்காளம் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு இந்தியா 5.798 மில்லியன் யூனிட் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
பூடானில் இருந்து சுமார் 5,585 மில்லியன் யூனிட் மின்சாரத்தை இறக்குமதி செய்வதை விட 213 மில்லியன் யூனிட் மின்சாரம் அதிகமாக உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நேபால் மற்றும் வங்காளம் இடையே முறையே 2.5 மற்றும் 2.8 மடங்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
மின்சார இறக்குமதி:
மின்சாரம் எல்லை வர்த்தகம் இந்திய நாட்டினில் 80ம் நூற்றாண்டுகளிலேயே தொடங்கிவிட்டது.
இந்தியா பூடானிடம் இருந்து மின்சாரத்தினை இறக்குமதி செய்து அதனை நேபாலுக்கு முறையே 33 KV மற்றும் 132 KV ரேடியல் முறையில் பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்கிறது.
சராசரியாக பூட்டான், இந்தியாவிற்கு 5,000- 5500 மில்லியன் யூனிட் மின்சாரம் அளித்து வருகிறது.
மின்சார ஏற்றுமதி:
தற்போது 600 மெகாவாட் மின்சாரத்தினை வங்காளத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
நேபாலிற்கு மின்சார ஏற்றுமதி செய்வது 145 மெகாவாட் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் 132 KV Katiya (பீகார்) – Kusaha (நேபால்) மற்றும் 132 KV Raxaul (பீகார்) – Parwanipur (நேபால்) வரை அதிகரிக்கப்படுகிறது.
மத்திய மின் ஆணையம் பற்றி:
இந்தியாவின் மத்திய மின் ஆணையம் (Central Electricity Authority of India (CEA)), மின்சார வழங்கல் சட்டத்தின் 1948 பிரிவு 3 (1) கீழ் அமைக்கப்பட்டு பின்னர் 70 (1) மின்சாரம் சட்டத்தின் 2003 பிரிவிலுள்ள சட்டப்படி அமைப்பாகும்.
மத்திய மின் ஆணையம், தேசிய மின்சார கொள்கை மற்றும் குறுகிய கால மற்றும் முன்னோக்கு திட்டங்களை உருவாக்கல் மற்றும் மின்சார அமைப்புகளின் உருவாக்கம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை சொல்கிறது.
மத்திய மின் ஆணையம், மேலும் மத்திய, மாநில மற்றும் தனியார் துறைகளின் நீர் மின்சாரத் வளர்ச்சி திட்டங்கள் வழிபடுத்துதலுக்கு உதவுகிறது.
_
தலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள்
ஜி -20 கட்டமைப்பின் பணிக்குழும (FWG) கூட்டம்
2017ம் ஆண்டு மார்ச் 28 மற்றும் 29 ம் தேதிகளில் ஜி -20 ஜெர்மன் பிரசிடென்சி கீழ் 3 வது ஜி -20 கட்டமைப்பின் பணிக்குழும (FWG) கூட்டம் வாரணாசியில் நடைபெற்றது.
முதல் இரண்டு ஜி -20 FWG கூட்டங்கள் ஜி -20 ஜெர்மன் பிரசிடென்சி கீழ் ஏற்கனவே டிசம்பர் 16ல் பெர்லினிலும் பிப்ரவரி 17ல் ரியாத்திலும் நடைபெற்றுள்ளன.
2009 ல் இருந்து G20ன் FWG மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இந்தியா நான்காவது முறையாக இந்த கூட்டத்தினை தொகுத்து வழங்கி வருகிறது.
முன்னதாக, G20ன் கூட்டங்கள் இந்தியாவில் 2012ல் ராஜஸ்தான், 2014ல் கோவா மற்றும் 2015ல் கேரளாவிலும் வெவ்வேறு ப்ரெசிடெண்சியின் கீழ் நடைபெற்றது.
_
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நல சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
UDAY – உதய் திட்டம் – கேரளா, திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் சேர்ந்தது
மத்திய அரசின் மின்சார விநியோக நிறுவன கடன் நிவாரண திட்டம், Ujjwal DISCOM Assurance Yojana (UDAY)ல் கேரளா, திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் சேர்ந்துள்ளது.
இதனுடன், மொத்தம் 26 மாநிலங்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளது.
UDAY பற்றி:
Ujwal DISCOM, Assurance Yojana அல்லது UDAY.
UDAY திட்டம் ஆனது மின்சார விநியோக நிறுவனங்களுக்கு உயிர் பெற்றிட நிதியுதவி வழங்குவதுடன் மேலும் பிரச்சினைக்களுக்கு ஒரு நிலையான நிரந்தர தீர்வினையும் உறுதி செய்கிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English on your Inbox.
Read TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English. Download daily TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English.
Monthly compilation of TNPSC TAMIL CURRENT AFFAIRS MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]