Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs May 06, 2017

TNPSC Tamil Current Affairs May

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 06, 2017 (06/05/2017)

 

Download as PDF

தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்

உலகின் வேகமான கேமரா

சுவீடன் நாட்டின் லுண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு கேமராவை உருவாக்கியுள்ளனர், இது வினாடிக்கு ஐந்து டிரில்லியன் படங்களைச் எடுக்கக்கூடியதாகும்.

இது லேசர் ஃப்ளாஷ்களுக்கு பதிலாக ரசாயன எதிர்வினைகள் மற்றும் உயிரியல் செயல்முறைகளை வெளிப்படுத்தும் ஒரு புதுமையான வழிமுறையைப் பயன்படுத்துகிறது.

இது FRAME (Frequency Recognition Algoirthm for Multiple Exposures) (பல வெளிப்பாடுகளுக்கான அதிர்வெண் அங்கீகார தேற்றம்) என்று அழைக்கப்படுகிறது.

_

தலைப்பு : புதிய நியமனங்கள்

காபி மற்றும் தேயிலை வாரிய தலைவர் பதவிக்கு புதிய தலைவர்களை அரசு நியமித்தது

இந்தியாவின் தேயிலை வாரியத்தின் தலைவராக அஸ்ஸாமை சேர்ந்த பிரபாத் கமால் பெஸ்புரோ (Prabhat Kamal Bezboruah) நியமிக்கப்பட்டார்.

எம் எஸ் போஜ் கௌடா (M S Boje Gowda) இந்தியாவின் காபி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய குறிப்புகள்:

கொல்கத்தா தலைமையக தேயிலை வாரியத்திற்கு தலைமை வகிக்கும் முதலாவது ஐ.ஏ.எஸ் பிரபாத் ஆவார்.

_

தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்

ஜார்கண்ட் நிதி ஆண்டினை மாற்றியுள்ளது

மத்தியப் பிரதேசத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது மாநிலமாக ஜார்கண்ட் ஜனவரி முதல் டிசம்பர் வரை அதன் நிதி ஆண்டைத் மாற்ற முடிவு செய்துள்ளது.

ஜார்க்கண்டில் இந்த புதிய நிதி ஆண்டு 2018 ஜனவரி முதல் டிசம்பர் 31, 2018 வரை கணக்கிடப்படும்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version