Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs May 08, 2017

TNPSC Tamil Current Affairs May

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 08, 2017 (08/05/2017)

 

Download as PDF

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

World Red Cross Day – உலக செஞ்சிலுவை நாள் – மே 08

“சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்” (International Red Cross and Red Crescent Movement) ஆகியவற்றின் கொள்கைகளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஒரு ஆண்டு நிகழ்வு உலக செஞ்சிலுவை தினம் ஆகும்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு தன்னார்வ தொண்டர்களுக்கு மரியாதை செலுத்தவும் அதே போல் உதவி தேவைப்படும் மக்களுக்கு தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தினை செலவிடும் தன்னார்வலர்களுக்கும் மரியாதை செலுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் இது கொண்டாடப்படுகிறது.

முக்கிய குறிப்புகள்:

செஞ்சிலுவை சங்கத்தின் நிறுவனர் பிறந்த நாளான மே 08 ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

நிறுவனர் ஹென்றி துனந்த் (Henry Dunant) அவர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் நிறுவனர் ஆவார்.

அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) நிறுவனரும் இவரே ஆவார்.

 

தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம், தேசிய பாதுகாப்பு

அசாம் “தொந்தரவு பகுதி” என இந்திய அரசு அறிவித்துள்ளது

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் (AFSPA) (Armed Forces (Special Powers) Act), மேலும் மூன்று மாதங்களுக்கு அசாம் முழுவதும் ஒரு “தொந்தரவு பகுதி” என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு வன்முறை நடவடிக்கைகள் காரணமாக, இந்த அறிவிப்பு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

 

தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்

7 வது ஆசியான் விருதுகள் – சச்சின் டெண்டுல்கருக்கு விருது – Fellowship Award for Sachin Tendulkar

7 வது ASIAN விருதுகளில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெல்லோஷிப் விருதைப் பெற்றார்.

முக்கிய குறிப்புகள்:

ஆசிய விருதுகள் வழங்கும் விழா இது ஐக்கிய ராஜ்யத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவாகும்.

இந்த விருதுகள், வணிக, தொண்டு, பொழுதுபோக்கு, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு ஆகியவை அடங்கிய 14 வகைகளில் அசாதாரண சாதனைக்கு அங்கீகாரம் அளித்து வெகுமதி அளிக்கின்றன.

_

தலைப்பு : சர்வதேச அரசியல்

இம்மானுவல் மேக்ரோன் (Emmanuel Macron) – பிரான்சின் இளைய ஜனாதிபதி

இம்மானுவல் மேக்ரோன் (Emmanuel Macron) பிரான்சின் இளம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை பற்றி:

இம்மானுவல் மேக்ரோன் முன்னாள் அரசு ஊழியர் மற்றும் முதலீட்டு வங்கியாளர் ஆவார்.

அவர் பாரிசில் நான்ட்டெர் பல்கலைக்கழகத்தில் (Nanterre University) தத்துவம் படித்தவர்.

அவர் Inspectorate General of Finances (IGF) ல் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஃபிரான்சன்ஸ் ஆக பணிபுரிந்துள்ளார்.

பின்னர் ரோட்ஸ்சைல்ட் & ஸீ பன்வேவில் (Rothschild & Cie Banque)-ல் முதலீட்டு வங்கியாளராக ஆனார்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version