TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs February 08, 2018 (08/02/2018)
Download as PDF
தலைப்பு : இந்திய கலாச்சார விழாக்கள், சமீபத்திய நாட்குறிப்புகள், மாநிலங்களின் விவரங்கள்
மகா மஸ்தகாபிஷேக விழா – Mahamastakabhisheka
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா மஸ்தகாபிஷேக விழா கர்நாடகாவில் கோலாகலம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷரவண பெலகோலா சமணர்களின் புனித தலமாக விளங்குகிறது.
இங்குள்ள வித்யகிரி மலையில் சமண பகவான் பாகுபலி கோமதேஷ்வரின் 59 அடி உயர பிரம்மாண்ட பிரதிஷ்டை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த பாகுபலி மூர்த்திக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமண மத குருமார்களால் மகா மஸ்தகாபிஷேகம் செய்யப்படுகிறது.
கிபி 981-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்நிகழ்வு 88-வது முறையாக, நிகழாண்டில் பிப்ரவரி 7-ம் (நேற்று) தேதியில் இருந்து 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரலாற்று புகழ்பெற்ற மகா மஸ்தகாபிஷேக விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
_
தலைப்பு: இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சமீபத்திய நிகழ்வுகள்
பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் கடந்த மாதம் 18ம் தேதி அக்னி-5 மற்றும் நேற்று முன்தினம் அக்னி-1 ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை சோதனையும் நேற்று நடத்தப்பட்டது.
ஒடிசாவின் சண்டிப்பூர் ஏவுதளத்தில் இருந்து செலுத்தி இந்த சோதனை செய்யப்பட்டது.
அது, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிருத்வி-2 ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு கடந்த 2003ம் ஆண்டு முதல் ராணுவ பயன்பாட்டிற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அவ்வப்போது அது நவீனமயமாக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டு வருகின்றது.
கடந்தாண்டு ஜூன் 2ம் தேதி பிருத்வி-2 சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்த ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்.
350 கிமீ தூரம் பாய்ந்து இலக்கை அழிக்கும் திறன் கொண்டது.
_
தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை
மினமட்டா மாநாடு
மினமட மாநாட்டின் ஒப்புதலுக்கான ஒரு திட்டத்தை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இது மனித ஆரோக்கியத்தையும் சூழலையும் பாதரசத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து காப்பாற்ற உதவும் உலகளாவிய உடன்படிக்கை ஆகும்.
இந்த மாநாட்டில் இந்தியா சேர்ந்த பிறகு, பாதரசம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவின் தொழில்நுட்ப அல்லது நிதி உதவி பெற எளிதாக இருக்கும்.
மினமட்டா மாநாடு பற்றி:
மெர்குரி பற்றிய மினமட்டா மாநாடு பரவலான பாதரச மாசுபாட்டிற்கு பங்களிப்பு செய்யும் குறிப்பிட்ட மனித நடவடிக்கைகளை குறிக்கும் பலவகை சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, வரும் தசாப்தங்களில் உலகளாவிய பாதரச மாசுபாட்டை குறைக்க உதவும்.
மினமட மாநாட்டின் பெயரானது ஜப்பானிய நகரமான மினமாட்டா என்றதிலிருந்து பெயரிடப்பட்டது.
இது மினமோட்டா விரிகுடாவில் ஒரு வேதியியல் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த தொழிற்சாலை கழிவுப்பொருட்களின் மூலம் அவை பல தசாப்தங்களாக கடுமையான, பாதரச நச்சுத்தன்மையை எதிர்கொண்டது.
கழிவுப்பொருட்களில் தங்கியிருந்து மெத்தில் மெர்குரி மீன் மற்றும் சிப்பி மீன் ஆகியவற்றில் கலந்தது.
மினமாடா வளைகுடாவிலிருந்து கடல் உணவு உட்கொள்ளும் உள்ளூர் மக்கள் மிகவும் வியாதிப்பட்டனர், பலர் இறந்தனர் அல்லது கடுமையாக முடக்கப்பட்டனர்.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், சமீபத்திய நிகழ்வுகள்
தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக புதுமடம் கிராமம் தேர்வு
தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த புதுமடம் கிராமம் மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராம விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கிராம மேலாண்மை மையம் சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, குடிநீர், மருத்துவம், தனிநபர் கழிப்பறை, மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும், சிறந்த மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளை தேர்வுசெய்து தீன தயாள் உபாத்யாய கிராம விருதினை வழங்கி வருகிறது.
சில குறிப்புகள்:
இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் சிறந்த 23 ஊராட்சிகளை தேர்வு செய்து விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக புதுமடம் கிராமம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் 47ல் மண்டபம் ஒன்றியத்திற்குள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அமைந்துள்ளது புதுமடம் கடற்கரை கிராமம்.