TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
TNPSC - History & Indian National Movement
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - Group 1, 2 & 2A
TNPSC - History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC - Indian Polity












www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs January 01 2018 (01/01/2018)
Download as PDF
தலைப்பு : பொது நிர்வாகம், நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
அருணாச்சல் திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலையானது என அரசு அறிவித்தது
சிக்கிமிற்கு பிறகு, வடகிழக்கு மாநிலத்தின் இரண்டாவது மாநிலமான அருணாச்சல பிரதேசம், திறந்த வெளியில் மலம் கழித்தலில் இருந்து விடுதலையானது என மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலத்தில் 21 மாவட்டங்கள் உள்ளன. அம்மாநிலம் மத்திய அரசின் அக்டோபர் 2, 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய காலக்கெடுவிற்கு முன்னதாகவே மாநிலத்தின் இந்த சாதனையைபடைத்துள்ளது.
SBM பற்றி:
2019 ஆம் ஆண்டுக்குள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை அகற்றும் நோக்கில் ஸ்வஷ் பாரத் மிஷன் – தூய்மை இந்தியா திட்டம் (SBM) தனது குறிக்கோளாக கொண்டு இருக்கிறது.
மேலும் இத்திட்டமானது, சுகாதாரமில்லாத கழிப்பறைகளை அகற்றி ஆரோக்கியமான கழிப்பறைகளை உருவாக்கிடவும் மனிதன் மல கழிவுகளை துப்புரவு படுத்துவதை நீக்கிடவும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பணியின் முக்கியத்துவம்:
சுகாதாரமில்லாத கழிவுகள் ஒவ்வொரு வருடமும் நூறாயிரக்கணக்கான குழந்தைகளை தொற்று நோய்களால் தாக்கப்பட்டு இறப்பதையும் தடுக்க வழிவகுக்கும்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை குறைப்பதை ஒரு இலக்காக அறிவித்தது ஒரு நல்ல யோசனையாகும்.
_
தலைப்பு : சுகாதாரம் மற்றும் விஞ்ஞானத்தில் புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
புதிய இரவு தவளை இனங்கள்
கோழிக்கோடு மலபார் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து விஞ்ஞானிகள் புதிய தவளைகளை கண்டுபிடித்துள்ளனர்.
மேவா சிங்’ஸ் நைட் தவளை என்றழைக்கப்படும் தவளை இனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு இனக்குழுவைச் சேர்ந்தவை.
வனவிலங்கு விஞ்ஞானி மேவா சிங்கின் பெயரால், நடத்தை சூழலியல் மற்றும் விலங்கியல் ஆய்வுகள் ஆகியவற்றிற்கான அவரது பங்களிப்புகளுக்கு மரியாதை காட்டும் நோக்கில் இந்த தவளை பெயரிடப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்:
நைட்ரிகாட்ரக்சஸ் என்ற மரபணுவில் உள்ள தவளைகள் பொதுவாக இரவில் தவளைகளாக அறியப்படுகின்றன, மேற்குத்தொடர் மலைத்தொடர்களில் மட்டுமே காணப்படுகின்றன.
இந்த குழுவுடன் இணைந்து மேவா சிங்கின் இரவு தவளை கூடுதலாக இரவு தவளைகளை 36 என்ற எண்ணிக்கைக்கு கொண்டுவருகிறது.
_
தலைப்பு : சுகாதாரம் மற்றும் விஞ்ஞானம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
இரண்டு புதிய இஞ்சி இனங்கள் வடகிழக்கில் காணப்படுகின்றன
கிழக்கு மாவட்டங்களான, மணிப்பூரின் உக்ருள் மற்றும் மியான்மர் எல்லையிலுள்ள நாகலாந்தின் டுயன்சாங் பகுதியிலும் இஞ்சியின் இரண்டு புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரு தாவரங்களும் சிங்கிபெரேசே குடும்பத்திலிருந்தே இருக்கின்றன, அவற்றில் பொதுவாக காணப்படும் இஞ்செர் (ஸிங்கிபர் ஆஃபினினேல்) சேர்ந்தவை.
_
தலைப்பு : உலக நிறுவனங்கள், சமீபத்திய சர்வதேச நிகழ்வுகள்
யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் விலகுகிறது
அமெரிக்காவுடன் இணைந்து யுனெஸ்கோவில் இருந்து விலக்கிக்கொள்ள இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேல் ஆக்கிரமிப்பினை எதிர்த்த யுனெஸ்கோவின் விமர்சனம் மற்றும் 2011 ல் பாலஸ்தீனத்திற்கு முழு அங்கத்துவத்தை வழங்குவதற்கான அதன் முடிவு ஆகியவற்றினை எதிர்த்து இஸ்ரேல் யுனெஸ்கோவை நிராகரிக்க முடிவு செய்துள்ளது.
இஸ்ரேல் 1949 ல் இருந்து யுனெஸ்கோவின் உறுப்பினராக இருந்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் அக்டோபர் 2017 ல் தனது விலகல் பணிக்கான அறிவிப்பை தாக்கல் செய்துள்ளன.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், செய்திகளில் உள்ள நபர்கள்
புதிய கின்னஸ் உலக சாதனை தமிழ்நாடு – 105மணி நேர இடைவிடாத யோகாவில் இருந்து
சென்னையினை சேர்ந்த கவிதா பரணிதரன், 105 மணி நேரத்திற்கு தொடர்ந்து யோகாவை நடத்தி ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை முயற்சித்திரிக்கிறார்.
இந்த யோகா பயிற்சியில், ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடைவெளி எடுத்த கவிதா பரணிதரன், டிசம்பர் 23, 2017 அன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து யோகா செய்ய ஆரம்பித்தார்.
31 வயதான இவரது கணவர் யோகா ஆசிரியராவார்.
இவர் 103 மணிநேர முன்கூட்டிய யோகாவின் முந்திய சாதனையை முறியடித்தார்.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார் – உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்
இந்திய செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், ரியாத்தில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சன் தங்க பதக்கத்தை வென்றார், ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் செர்ஜி கர்ஜாகின் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், செய்திகளில் நபர்கள்
உலக யோகாவில் தமிழ்நாட்டு பெண் தங்கம் வென்றார்
இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது டிசம்பர் 29, 30 அன்று ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபெற்ற யோகா மாணவி சி. கமாட்சி ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர்.
மேலும் இவர், ‘2017 உலக யோகா விளையாட்டு தரவரிசையில் சாம்பியன்ஷிப்’ போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அவரை பற்றி:
முதுகுளத்தூரில் இருந்து வந்தவர் காமாட்சி, இவர் தமிழ்நாடு உடல் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் M. ஸ்க் (யோகா) படித்துக்கொண்டிருக்கிறார்.
இவர் இப்போட்டியில், 100 மதிப்பெண்ணில் 80 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தங்கம் வென்றுள்ளார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
டோடா திருவிழா மோத்வேத் கொண்டாடப்படுகிறது
டிசம்பர் 31, 2017 இல், மோட்வெத் என அழைக்கப்படும் தோடர்களின் மிக முக்கியமான விழா, நீலகிரி மாவட்டத்தில் முத்தாநடு முண்டில் கொண்டாடப்பட்டது.