• No products in the basket.

TNPSC Tamil Current Affairs March 02, 2018

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs March 02, 2018 (02/03/2018)

 

Download as PDF

தலைப்பு : இந்தியாவின் வெளியுறவு கொள்கை, சமீபத்திய நாட்குறிப்புகள்

பஸ்ச்சிம் லெஹர் (எக்ஸ்பிஎல்-18)

பஸ்ச்சிம் லெஹர் (எக்ஸ்பிஎல்-18) என்ற மேற்கத்திய கப்பற்படை பிரிவின் பயிற்சி நிறைவடைந்து

அரபிக்கடலில் இந்திய கப்பற்படையின் மேற்கத்திய பிரிவு மேற்கொண்ட மிகப்பெரிய போர் நடவடிக்கை பயிற்சி நிறைவடைந்தது.

பஸ்ச்சிம் லெஹர் என்றால் என்ன?

‘மேற்கு அலை’ என்று பொருள்படும் பஸ்ச்சிம் லெஹர் (எக்ஸ்பிஎல்-18) எனப் பெயரிடப்பட்டிருந்த மூன்றுவாரகால இந்த போர் பயிற்சி மேற்கத்திய கப்பற்படை பிரிவின் போர் ஆயத்த நிலையையும் போர்த்திட்டங்களை அது செயல்படுத்தும் முறையையும் சோதித்தது.

விமானந்தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா, மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கப்பற்படையின் (சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கொல்கத்தா வகுப்பு கப்பல் உட்பட) முன்னணி கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், திறன்மிக்க 22-ஆவது எதிரியை அழிக்கும் பிரிவின் ஏவுகணை கப்பல்கள், ரோந்துக் கப்பல்கள், உள்ளுர் பிரிவின் கப்பல்கள், கடலோர காவல்படை கப்பல்கள் உள்ளிட்ட 40 கப்பற்படை கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்றன.

இந்த பயிற்சி, மேற்கத்திய கடற்படை கட்டளைகளின் செயல்பாட்டு, தளவாடங்கள் மற்றும் நிர்வாகத் திட்டங்களை மேலும் மேம்படுத்த உதவுகிறது.

_

தலைப்பு : மாநிலங்களின் சுயவிவரம், புதிய நிகழ்வுகள், பொது நிர்வாகம்

பெண்கள் மட்டுமே பணிபுரியும் பிராங்கிபுரம் ரயில் நிலையம்

பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிராங்கிபுரம் ரயில் நிலையம்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மூன்றாவது ரயில் நிலையமாக பிரங்கிபுரம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்தின் சில பிளாட்பார்ம்களில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் பேட் பெறுவதற்கான வசதிகளை செய்து இந்தியாவின் முன்மாதிரி ரயில் நிலையங்களில் ஒன்றாக பிரங்கிபுரம் ரயில் நிலையம் விளங்குகிறது.

_

தலைப்பு : பொது நிர்வாகம், இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கைகள், சமீபத்திய நிகழ்வுகள்

தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

தேசிய நிதி நடவடிக்கைகள் ஆணையத்தை (NFRA) அமைக்கவும் இதற்கு ஒரு தலைவர் பதவி, 3 முழுநேர உறுப்பினர் பதவிகள் ஒரு செயலாளர் பதவி ஆகியவற்றை உருவாக்குவதற்குமான முன்மொழிவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கணக்குத் தணிக்கை தொழிலை முறைப்படுத்தும் சுதந்திரமான அமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

2013-ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் மூலம் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவதில் ஒன்றாக இது இருக்கும்.

நிதித்துறையின் நிலைக்குழு அளித்த 21-வது அறிக்கையில் இடம் பெற்றுள்ள குறிப்பிட்ட பரிந்துரை அடிப்படையில் இந்த அம்சம் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம்:

இந்த முடிவு வெளிநாட்டு / உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவது, சர்வதேச நடைமுறைகளை எதிர்கொண்டு வணிகத்தின் உலகமயமாக்கலுக்கு உதவுவது, கணக்குத் தணிக்கை தொழிலை மேம்படுத்த மேலும் உதவி செய்வது என்ற பயன்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகார வரம்பு:

இந்தச் சட்டத்தின் 132-வது பிரிவின் கீழ் பட்டயக் கணக்காளர்களையும் அவர்களின் நிறுவனங்களையும் ஆய்வு செய்யும் என்எப்ஆர்ஏ-யின் அதிகார வரம்பு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெருமளவிலான பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறித்து விதிகளில் குறிப்பிடப்படும் பொதுமக்கள் நலன் சார்ந்த இதுபோன்ற நிறுவனங்களை ஆய்வு செய்யுமாறும் மத்திய அரசு குறிப்பிட முடியும்.

1949 பட்டயக் கணக்காளர்களுக்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அதன் உறுப்பினர்களுக்குப் பொதுவாகவும் விதிகளில் குறிப்பிடப்படும் சொத்து வரம்புக்கு கீழுள்ள பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குறிப்பாகவும் தற்போதுள்ள ஐசிஏஐ-யின் ஒழுங்குமுறை பணியும் தொடரும்.

விதிகளில் குறிப்பிடப்படும் சொத்து வரம்புக்கு கீழுள்ள பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தணிக்கை தரத்துக்கான ஆய்வு வாரியமும் தொடரும்.

மேலும பல நிறுவனங்களும் என்எப்ஆர்ஏ-வால் இந்த ஆய்வு வாரியத்திற்கு அளிக்கப்படும். மேலும் என்எப்ஆர்ஏ-வுக்கு தணிக்கை தரம் மற்றும் கொள்கைகள் வகுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆலோசனைப் பங்களிப்பையும்            ஐ சி ஏ ஐ தொடரும்.

பின்னணி:

கணக்குத் தணிக்கையில் ஏற்படும் முறைகேடுகளை உணர்ந்து உலகின் பல்வேறு அதிகார வரம்புகளை கணக்கில் கொண்டு சுயேச்சையான ஒழுங்குமுறையாளர்களைக் கொண்ட என்எப்ஆர்ஏ அமைப்பது அவசியமானது.

கணக்குத் தணிக்கை தரத்தை அமலாக்கவும் தணிக்கை நிறுவனங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்தி தணிக்கை தரத்தை உறுதி செய்யவும் இந்த அமைப்பு தேவைப்படுகிறது.

முதலீட்டாளர்களை அதிகப்படுத்தவும் நிறுவனங்களின் நிதி நிலைமைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகவும் இத்தகைய அமைப்பு அவசியமாகிறது.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

சென்னை பாதுகாப்பு கண்காட்சி 2018 பெரிய அளவு ஆர்வம்

கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு கண்காட்சி இந்தியா என்ற நிகழ்ச்சி அதன் வகையில் உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஆகி உள்ளது. முதல் முறையாக பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் 2018 ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தல் என்ற இடத்தில் சென்னைக்கு அருகே கிழக்கு கடற்கரையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதுவரை 42 நாடுகள் இதில் பங்கேற்பதற்கு உறுதி தெரிவித்துள்ள நிலையில், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு உற்பத்தியில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நாடுகளில் சில.

_

தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள், சமீபத்திய நிகழ்வுகள்

2018 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

2018 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் கிர்கியாசில் பிஷ்கெக் கோசோம்குல் விளையாட்டு அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்வானது பிப்ரவரி 27 முதல் மார்ச் 4, 2018 வரை நடந்தது.

இதில் வென்ற இந்தியர்கள்:

ஆண்கள் ஃப்ரீஸ்டைலின் கீழ்:

65 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.

வினோத் குமார் ஓம்பிரகாஷ், இந்தியா 70 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கிரேக்க ரோமானியரின் கீழ்:

ராஜேந்தர் குமார், இந்தியா 55 கிலோ பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.

82 கிலோ பிரிவில் வெண்கல பதக்கத்தை ஹர்பிரீத் சிங் பெற்றார்.

பெண்கள் ஃப்ரீஸ்டைலின் கீழ்:

50 கிலோ பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட். இதில் சீனாவினை சேர்ந்த லீ சுன், வினேஷ் போகட்-டை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

சங்கீதா போஜட், 59 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

சக்ஷி மாலிக் 62 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

65 கிலோ பிரிவில், தங்கம் பதக்கம் வென்றார் Navjot கவுர்.

_

தலைப்பு : அறிவியல் மற்றும் உடல்நலம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், செய்திகள் உள்ள நபர்கள்

புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சாதனை: அமெரிக்க இந்தியர் நவீனுக்கு ரூ. 7.75 கோடி

புற்று நோய் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய அமெரிக்கரான நவீன் வரதராஜனுக்கு 7 கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரசாயனம் மற்றும் மூலக்கூறு பொறியியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் நவீன் வரதராஜன்.

இவர் சக பேராசிரியர் சாங்யூக் சூங்குடன் இணைந்து புற்று நோய் குறித்த ஆராய்ச்சி செய்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் டிசெல் என்ற உயிரணுக்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். இதன் மூலம் புற்று நோய் கட்டிகளை அழிக்க முடியும் என அவர் கண்டறிந்தள்ளார். அதுபோலவே போராசிரியர் சாங்யூக், கர்ப்பப்பை, வாய் புற்று நோய் தடுப்பது குறித்த ஆராயச்சிகளை மேற்கொண்டுள்ளர்.

இவர்களுக்கு டெக்சாஸை சேர்ந்த புற்று நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் பல கோடி ரூபாய் நிதி வழங்கி கவுரவித்துள்ளது.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.