fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs June 26, 2017

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs June 26, 2017 (26/06/2017)

 

Download as PDF

தலைப்பு : விண்வெளி தொழில்நுட்பங்கள், புதிய நாட்குறிப்புகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்

மீனிடை மேகங்களைப் பற்றி ஆராய நாசாவின் CHESS

பரந்த மீனிடை மேகங்களைப் பற்றி ஆராய்வதற்கு விண்மீண்களின் உருவாகிய ஆரம்ப நிலைகளைப் பற்றி அறிவதற்கும் நாசாவின் ராக்கெட் CHESS என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மீனிடை மேகம் என்றால் என்ன?

நமது மற்றும் பிற அண்டங்களில் காணப்படும் வாயு, பிளாஸ்மா மற்றும் தூசி ஆகியவற்றிற்கு இட்ட பொதுவான பெயர்தான் இந்த மீனிடை மேகம் என்பது ஆகும்.

ஒரு மீனிடை மேகம் சராசரி நட்சத்திர மண்டலத்தின் சராசரி பகுதியை விட அடர்த்தியானது.

இதன் பின்னணி:

இந்த மிதக்கும் விண்மீன் நீர்த்தேக்கங்கள் தான் NASAவின் நிதியளிக்கப்பட்ட CHESS ராக்கெட்டின் பணியின் மையமாக இருக்கின்றன.

இந்த CHESS, நட்சத்திர உருவாக்கத்தின் ஆரம்ப நிலைகளில் அறிவதற்கு பயன்படுகிறது.

நீங்கள் CHESS பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

கொலராடோ உயர் தீர்மான Echelle Stellar நிறமாலைவரைவி (The Colorado High resolution Echelle Stellar Spectrograph) விண்மீனிடை ஊடகத்தினை ஒளி முறைகளை பயன்படுத்தி அதனை கண்டறிந்து ஆராய உதவும்.

இது நட்சத்திரங்களின் வாழ்க்கை சுழற்சியைப் புரிந்துகொள்வதற்கு முக்கிய தகவலை வழங்குகிறது.

செஸ் தனது பயணத்தை பீட்டா ஸ்கோர்பி (Beta Scorpii) என்ற நட்சத்திரத்திலிருந்து தொடங்குகிறது.

ஏனென்றால் விருச்சிக விண்மீன் குழாம் எனப்படும் இந்த நட்சத்திரமானது, (Scorpius) இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும்.

இதன் அமைவு மற்றும் இதன் வெப்பத்தன்மை காரணமாக நட்சத்திரம் மற்றும் நமது சொந்த சூரிய மண்டலத்திற்கு இடையில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

_

தலைப்பு : உலக அமைப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள்

உலக Taekwondo கூட்டமைப்பு அதன் பெயரை மாற்றுகிறது

உலக டைக்வோண்டோ ஃபெடரேஷன் (World Taekwondo Federation) என்ற தனது பெயரை அதன் சுருக்கமான WTF உடன் வந்த எதிர்மறை உச்சரிப்புகளின் காரணமாக உலக டைக்வோண்டோ (World Taekwondo) என மாற்றிக் கொண்டது.

1973 இல் நிறுவப்பட்டதிலிருந்து கூட்டமைப்பின் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும் அவர்களது தலைவர் சௌ சுங்-வான் இது நிறுவனத்தை மறுசீரமைக்க முக்கியமான நேரம் என உணர்ந்து பெயரை மாற்றியுள்ளது.

2017 உலக டெக்யுண்டோ சாம்பியன்ஷிப் துவங்குவதற்கு முன் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

_

தலைப்பு : விருதுகள் மற்றும் விளையாட்டுகள்

கே. ஸ்ரீகாந்த் ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் தொடர் பட்டத்தை வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் தொடரில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை தோற்கடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் தொடர் பட்டத்தை வென்றார்.

_

தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள்

அஜிம் பிரேம்ஜி அவர்களின் அறப்பணிக்காக கார்னேகி பதக்கம் வழங்கப்பட்டது

விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி அவர்களுக்கு அவர் செய்த அறப்பணிகளுக்காக இந்த ஆண்டின் கார்னேகி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டின் கார்னேகி பதக்கம் பெறும் எட்டு நபர்களில் இவர் ஒருவராக உள்ளார்.

இந்தியாவில் பொது பள்ளி முறைகளை ஒழுங்குபடுத்த எடுத்த சீர்திருத்த முயற்சிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த பதக்கம் பற்றி:

ஆண்ட்ரூ கார்னகி நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மூலம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இந்த கார்னேகி பதக்கம் வழங்குவது தொடங்கப்பட்டது.

பிற தொண்டு நிறுவனங்களின் சாதனைகளை அங்கீகரிப்பதன் மூலம் திரு. கார்னெகியின் திருப்திகரமான சாதனைகள் கௌரவிப்பதற்காக கார்னகி பதக்கம் வழங்கப்பட்டது.

பிரேம்ஜி பற்றி:

அசிம் ஹசிம் பிரேம்ஜி ஒரு இந்திய வர்த்தக தொழிலாளி, முதலீட்டாளர் மற்றும் விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

அவர் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரும் மன்னராக அறியப்படுகிறார்.

நான்கு தசாப்தங்களாக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி மூலம் விப்ரோவை வழிநடத்தும் பொறுப்புகளினால் இறுதியாக, மென்பொருள் துறையில் உலகத் தலைவர்களில் ஒருவராக உருவானார்.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

கடற்படை தினம்ஜூன் 25, 2017

கடற்படை தினம் (DoTs – Day of the Seafarer) 2017 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 25 ஆம் தேதி சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மூலம் ‘கடல்வாழ் மக்கள்’ என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாள் பற்றி:

ஜூன் 25 ம் தேதி, 2010 ஆம் ஆண்டில் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) இத்தேதியை சர்வதேச தினமாக அறிவிக்க முடிவு செய்தது.

நம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடல் போக்குவரத்து மூலம் பாதிக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள இது ஒரு வழி ஆகும்.

உலகப் பொருளாதாரம் மற்றும் சட்ட சமூகம் ஆகியவற்றிற்கான பங்களிப்பிற்காக கடற்படைக்கு நன்றி செலுத்துவதே நாளின் நோக்கம்.

_

தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்

தேர்தல் ஆணையம் மத்திப்பிரதேச அமைச்சரை பதவியிலிருந்து விலக்கியது

மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் அமைச்சர் நொரட்டம் மிஸ்ரா (Narottam Mishra) அவர்களை தேர்தல் ஆணையம் பதவியிலிருந்து விலக்கியது.

இவரை மாநில சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் தகுதியிலிருந்ததும் தேர்தல் செலவுகளின் தவறான கணக்குகளைத் தாக்கல் செய்தற்காக விலக்கியுள்ளது.

பதவியிலிருந்து விலக்க தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள்:

இது 1951 ஆம் ஆண்டின் பொதுச் சட்டத்தின் பிரிவு 10 ஏ பிரிவின் கீழ் உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்டது.

இது சட்டத்தின் 77 மற்றும் 78 பிரிவுகளிடம் படிக்க வேண்டும்.

தேர்தல்களின் போது ஏற்படும் செலவினங்களில் கமிஷனுக்கு தவறான தகவலை வழங்குவது தொடர்பானது இது.

சட்டப்படி விதிக்கப்பட்ட முறையிலும், நேரத்திலும், தேர்தல் செலவுகளின் கணக்குகளை தவறாக வழங்கினால் ஒரு வேட்பாளர் தகுதியை இழக்க செய்ய ஆணைக்குழுக்கு அதிகாரம் உள்ளது.

சட்டத்தின் கீழ் மற்ற தகுதியிழப்பு போன்ற தகுதியிழப்பு காலத்தை நீக்குவதற்கான அல்லது குறைப்பதற்கான அதிகாரத்தையும் கமிஷன் கொண்டுள்ளது.

[/vc_column_text][/vc_column][/vc_row]

1 responses on "TNPSC Tamil Current Affairs June 26, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.

CRACK TNPSC

with Best Online Class & Tests

Winner