fbpx
  • No products in the basket.

குரூப் 2 & 2A பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 2 & 2A தேர்வில் முதலாம் தரவரிசையில் இடம்பிடிப்பது எப்படி?

TNPSC குரூப் 2 & 2A தேர்வு முறை:

முக்கியமாக கவனிக்க வேண்டியது, TNPSC குரூப் 2 & 2A தேர்வு 3 கட்டத் தேர்வாக நடத்தப்படுகிறது. இதில் குரூப் 2 (நேர்காணல்) தேர்வுக்கு 3 முதல் நிலை (objective), முதன்மை (Mains – எழுத்து) மற்றும் நேர்காணல் தேர்வுகள் ஆகும். குரூப் 2A தேர்விற்கு, முதல் நிலை (objective) மற்றும் முதன்மை (Mains – எழுத்து) ஆகிய இரண்டு தேர்வுகள் ஆகும்.

முதற் கட்டத்தேர்வு : முதல் நிலைத் தேர்வு

இரண்டாம் கட்டத்தேர்வு : முதன்மைத் தேர்வு  – முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்தேர்வான முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.

மூன்றாம் கட்டத்தேர்வு : நேர்காணல் – முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். (குரூப் 2a பணிகளுக்கு நேர்காணல் தேர்வு கிடையாது.)

இறுதியாக குரூப் 2 பணிகளுக்கு, முதன்மைத் தேர்வு  மற்றும்  நேர்காணல் தேர்வு இரண்டிலும் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் அடிப்படையைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுசெய்யப்படுவார்கள். குரூப் 2A பணிகளுக்கு, முதன்மைத் தேர்வில் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் அடிப்படையைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுசெய்யப்படுவார்கள். முதன்மைத் தேர்விற்கான  தேர்ச்சிக்கு  மட்டுமே முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க. இறுதி தேர்வுக்கு முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் தேவை இல்லை.

TNPSC குரூப் 2 & 2A தேர்வு முறை:

முதல் நிலைத் தேர்வு

கேள்விகள்: 200; மொத்த மதிப்பெண்கள்: 300; மொத்த நேரம்: 3 Hrs;

பொது அறிவு – 175 கேள்விகள்

கணிதம்  மற்றும் மன திறன் – 25 கேள்விகள்

மொத்தம் – 200 கேள்விகள்

 

குறிப்பு: கணிதம்  மற்றும் மன திறன் பகுதி பொது அறிவு பகுதியுடன் இணைந்து வரும். எனவே, 25 கணித கேள்விகள் 175 பொது அறிவு கேள்விகள் சேர்த்து  மொத்தம் 200 கேள்விகள் இருக்கும்.

TNPSC Group 2 Syllabus – Download PDF :

In English | தமிழில்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.