• No products in the basket.

7.18 ஜி.யு.போப்

  • இவரது பெயர் ஜார்ஜ் யுக்ளோ போப் என்பதேயாகும்.
  • இதன் சுருக்கமே ஜி.யு.போப்
  • பிரான்ஸ் நாட்டிலுள்ள எட்வர்ட் தீவில் ஜான் போப், கேதரின் யுளாப் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
  • பிறப்பு 1820 இறப்பு 1907
  • இவர் தமிழகத்தில் கிருத்தவ மதத்தைப் பரப்புவதற்காக, சென்னை வருவதற்கு எடுத்துக் கொண்ட 8 மாத காலத்தில் தமிழையும் வடமொழியையும் கற்றறிந்தார்.
  • முதலில் சென்னையிலும் பிறகு திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்திலும் (1842-1849) சமயப்பணி செய்துவந்தார்.
  • ஏசுநாதரின் இதய ஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி என்று திருக்குறளைப் புகழ்ந்தார்.
  • இவரது ஆசிரியர் இராமானுஜர் கவிராயர் மூலம் புறநானூறு, நன்னூல் போன்றவற்றையும் கற்றார்.
  • 1950-ல் இங்கிலாந்தில் தனது திருமணம் முடிந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் தஞ்சாவூரில் தனது துணைவியுடன் சேர்ந்து சமயப்பணி செய்தார்.
  • 1858-ல் உதகையில் பள்ளி ஒன்றை தொடங்கியதுடன் அதன் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
  • இவர் கணிதம், மெய்யறிவு, அறிவாய்வு முதலிய பாடங்களைக் கற்பிக்கும் கல்லூரிப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
  • திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • திருவாசகம், திருவருட்பயன், சிவஞான போதம், நாலடியார், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, ஆகியவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
  • தமிழ் செய்யுள் கலம்பகம் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
  • தமிழில் வரலாற்று நூல்களையும், உரைநடை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
  • தமிழ் – ஆங்கில அகராதி,
  • ஆங்கில – தமிழ் அகராதி என இரண்டையும் வெளியிட்டுள்ளார்.
  • 1885 – 1907 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக இங்கிலாந்தில் பணியாற்றினார்.
  • தமது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்று எழுதி வைக்க வேண்டும் என்று கூறியவர்.

போப், செந்தமிழ்ச் செம்மல் ‘டாக்டர் ஜி.யு. போப்’, 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த ‘சாந்தோம்’ என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி.யு. போப் ஆவார்.

 

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.