fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs May 31, 2017

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 31, 2017 (31/05/2017)

 

Download as PDF

தலைப்பு : பொது விழிப்புணர்வு, பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்

நுகர்வோர் அலுவலகத் துறையால் நாடு முழுவதும் ஸ்வச்ச்த பக்வாடா (Swachhta Pakhwada) வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது

நுகர்வோர் அலுவல், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் அலுவலகங்கள் துறை மூலம் மே 16 முதல் மே 31, 2017 வரை ஸ்வச்ச்த பக்வாடா (Swachhta Pakhwada) வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

ஸ்வச்ச்த பக்வாடா (Swachhta Pakhwada) பற்றி:

இந்த ஸ்வச்ச்த பக்வாடா ஆனது உறுதிமொழி எடுத்துக்கொள்ளுவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

இதில் நுகர்வோர் அலுவலகத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் துப்புரவு பற்றி விழிப்புணர்வு கொண்டுவரவும் அதன் செயல் நடைமுறைகளை பின்பற்ற தூண்டுவதும் மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் இதனை பொறுப்பேற்றது நிறைவேற்றவும் விழிப்புணர்வும் கொண்டுவர தனது நோக்கமாக கொண்டுள்ளது.

_

தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்

ஜெர்மனியின் BlessU-2 ரோபோ

சமீபத்தில் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ஒரு ரோபாட் மதகுரு மக்களுக்கு ‘ஆசீர்வாதம்’ வழங்குகிறது.

இந்த ரோபாட் மதகுரு நீங்கள் ஆண் அல்லது பெண் குரல் ஆசீர்வாதம் வேண்டும் என்பதை தேர்வு செய்தவுடன், அதன் கைகளை உயர்த்துகிறது, அதன் கைகளிலிருந்து ஃப்ளாஷ் லைட்கள் எரிந்தவுடன் ஒரு பைபிள் வசனத்துடன் கடவுள் ஆசிர்வதிக்கவும் உங்களை பாதுகாக்கவும் செய்கிறார்” என கூறுகிறது.

இதில் பக்தர்கள் இந்த ஆசீர்வாதத்தை அச்சிடுவதற்கு ஒரு தேர்வும் உள்ளது.

முக்கிய குறிப்புகள்:

இந்த ரோபோட் மதகுரு, சீர்திருத்தத்தின் துவக்கம், PTIன் 500 வது ஆண்டு நிறைவினை குறிக்கும் பொருட்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. இந்த சீர்திருத்தம் 16 ஆம் நூற்றாண்டில் சர்ச்சில் நடந்தது ஒரு மத புரட்சி ஆகும்.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

மோடி – 30 ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு பயணித்த முதல் இந்திய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் சென்ற முதல் இந்திய பிரதமர் ஆனார்.

1988 ஆம் ஆண்டில் ஸ்பெயினை பார்வையிட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சென்றார்.

_

தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்திகளில் நபர்கள், புதிய நிகழ்வுகள்

தாதாசாஹேப் பால்கே அகாடமி விருதுகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டசர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகைபிரிவின் கீழ் பிரியங்கா சோப்ராவிற்கு விருது

ஒரு சர்வதேச நட்சத்திரமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களுக்கு தாதாசாஹேப் பால்கே அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்.

தாதாசாஹேப் பால்கே அகாடமி விருதுகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை (Internationally acclaimed Actress) பிரிவின் கீழ் பிரியங்கா சோப்ராவிற்கு விருது வழங்கப்படும்.

ஜூன் மாதம் 1, மும்பையில் நடைபெறும் விழாவில் அவருக்கும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.

_

தலைப்பு : இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கை, சமீபத்திய நாட்காட்டி நிகழ்வுகள்

ஆர்.பி. (RBI) புதிய ரூ .1 நாணயக் தாளை அறிமுகப்படுத்த உள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் ஒரு ரூபாய் மதிப்பு நாணய தாள்களை அறிமுகப்படுத்தும்.

இந்திய அரசாங்கத்தால் ஏற்கனவே அச்சிடப்பட்ட இந்த நாணய தாள்கள், நாணய சட்டத்தின் கீழ் 2011 சட்டப்பூர்வமாக வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே சுற்றில் இருக்கும் இந்த நாணய தாள்களும் தொடர்ந்து சட்ட பூர்வமாக ஒத்துக்கொள்ளப்படும்.

இதில் தாளின் சுற்றியுள்ள வடிவமைப்பு மகாராஷ்டிராவில் உள்ள சாகர் சாம்ராட் “Sagar Samrat” என்ற எண்ணெய் ஆய்வு மையத்தின் ஒரு படத்தைக் கொண்டுள்ளது.

 

தலைப்பு : உலக அமைப்பு, அறிக்கைகள் மற்றும் முடிவுகள், சமீபத்திய நாட்குறிப்புகள்

உலக வங்கி அறிக்கைபெண் தொழிலாளர் பிரிவில் 131 நாடுகளில் 120 வது இடத்தைப் பெற்றுள்ளது

உலக வங்கி வெளியிட்டுள்ள இந்திய அபிவிருத்தி அறிக்கையின்படி, தொழிலாளர்களில் குறைந்தபட்ச பெண் பங்களிப்பை இந்தியா கொண்டிருந்து 131 நாடுகளில் 120 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அறிக்கை படி, பட்டதாரிகள் 42% பெண்கள் இருந்தும் பெண்களின் பங்கேற்பு நிலை 2005 ல் இருந்து குறைந்து வருகிறது.

முக்கிய குறிப்புகள்:

இந்தியப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் முதன்மையாக விவசாயத் துறையில் உள்ளன.

சேவைகள் மற்றும் தொழிலில் உள்ள பெண்களின் பங்கு 20% க்கும் குறைவானதாகும்.

உலக வங்கியின் இந்தியா வளர்ச்சி அறிக்கையானது இதேபோன்ற வருமான அளவு கொண்ட நாடுகளான யேமன், பாக்கிஸ்தான் மற்றும் எகிப்து ஆகியவற்றோடு சேர்ந்து கீழ்மட்டத்தில் உள்ளன.

[/vc_column_text][/vc_column][/vc_row]

1 responses on "TNPSC Tamil Current Affairs May 31, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.