
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tnpsc current affairs in tamil – Dec. 29, 2016 (29/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
பிரான்ஸ் உடன் சர்வதேச சூரிய கூட்டணி (ISA)
ISA வின் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவை (MNRE) கொண்டு பிரான்ஸ் உடன் இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய குறிப்புகள் :
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான 21-வது கூட்டத்தின் பொது ISA கூட்டாக தொடங்கப்பட்டது.
சூரிய ஆற்றலில் ஆராய்ச்சி செய்வதற்காக 121 சூரிய வள மிக்க நாடுகளை ஒருங்கிணைப்பதன் பொருட்டு, இந்த ISA தொடங்கப்பட்டது. ஆனால் இன்று வரை, 25 நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
ISAவின் தலைமையகம் ஹரியானாவிலுள்ள guragaonனில் குவால் பஹாரியில் அடிக்கல் நாட்டபட்டுள்ளது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
இந்தியாவில் முதல் கம்பளிப்பூச்சி ரயில் (Cater pillar train)
2016ம் தொடக்கத்தில் அமெரிக்காவின் MITல் உலக விருதை வென்ற ஒரு இந்திய ரயில்வே அதிகாரி மூலம் வடிவமைக்கப்பட்ட அமைப்பு “கேட்டர்பில்லர் ரயில்கள்“ ஆகும்.
இவை முதன்முதலில் ஹரியானாவில் நகர்ப்புற பொதுமக்களின் போக்குவரத்து தீர்விற்கு ஒரு புதிய கருத்தாக செயல்படுத்தபட இருக்கிறது.
கம்பளிப்பூச்சி ரயில் பற்றி:
“கேட்டர்பில்லர் ரயில்” ஒரு ரயிலின் மினியேச்சர் வடிவம் ஆகும். அதுமட்டுமில்லாமல் இதனை நிறுவுவதற்கு ஐந்து மீட்டர் அளவிலான சாலை மட்டுமே தேவைப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே பொது போக்குவரத்துக்கு ஒரு பொருத்தமான முறையில் இதனை அமைக்க முடியும்.
அதன் ரயில்பெட்டிகள் சக்கரங்கள் கீழே மற்றும் மேல் அமையுமாறு இருப்பதால் அது ஒரு கம்பளிப்பூச்சி போன்ற தோற்றத்தை கொடுக்கும்.
ஒரு மெட்ரோ ரயில் பெட்டிகளை ஒப்பிடுகையில் இதன் ரயில்பெட்டிகளின் நில பயன்பாட்டினை தவிர அதன் எடை, செலவு மற்றும் அளவு மிகவும் குறைவாக உள்ளது.
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
பிஹாரி புரஸ்கார் விருது 2016
ராஜஸ்தானி இலக்கியவியலாளர் சத்ய நாராயண் அவரது இந்தி புத்தகம் “yeh Ek Dhunia”விற்காக 2016ம் ஆண்டின் பிஹாரி புரஸ்கார் விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது பற்றி:
இந்தி மற்றும் ராஜஸ்தானி மொழிகளில் பிரபல இந்தி கவிஞர் பிஹாரி அவர்களை நினைவில் கொள்ளும் பொருட்டு, பிஹாரி புரஸ்கார் விருது 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது.
[/vc_column_text][vc_column_text]
For more Tnpsc current affairs in tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tnpsc current affairs in tamil and English on your Inbox.
Read Tnpsc current affairs dec in tamil and English. Download daily Tnpsc current affairs in tamil for TNPSC and Monthly compilation of Tnpsc current affairs in tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "Tnpsc current affairs in tamil – Dec. 29, 2016"