
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tnpsc current affairs in tamil – Dec. 31, 2016 (31/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
தேசிய அறக்கட்டளையின் மொபைல் பயன்பாடு மற்றும் பேஸ்புக் பக்கம்
“தேசிய அறக்கட்டளையின் நிறுவிய நாளை” குறிக்கும் பொருட்டு அரசாங்கத்தின் மூலம் “அனைவரும் கொண்டாடலாம்” என்ற கருத்தினை கொண்டு தேசிய அறக்கட்டளையின் மொபைல் பயன்பாடு மற்றும் பேஸ்புக் பக்கம் துவங்கப்பட்டுள்ளது.
பின்னணி:
1999ல் டிச. 30 வது நாள் தேசிய அறக்கட்டளை சட்டம் மூலம் ஆட்டிசம், பெருமூளை வாதம், மூளைக்குறைபாடு மற்றும் பல குறைபாடுகள் உள்ள நபர்கள் நலனுக்காக இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய அறக்கட்டளை பற்றி:
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழுள்ள ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை கீழ் தேசிய அறக்கட்டளை இயங்கிவருகிறது.
இதில் ஊனமுற்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக திருத்தப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட 10 திட்டங்களை தேசிய அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.
_
தலைப்பு: புவியியல் – புவியியல் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்
புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும்
பூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படு கிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது.
இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப்படுகிறது. இது மிகவும் துல்லியமானது. தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.
பொதுவாக பூமி ஒரே வேகத்தில் சுற்றுவது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் சுற்றுகிறது. இதனால் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வானியல் நேரத்துக்கும் அணு கடிகாரத்தின் நேரத்துக்கும் நூலிழை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது.
அதன்படி 500 முதல் 750 நாட்கள் கால அளவில் வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையே ஒரு விநாடி வேறுபாடு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய உலகின் அணு கடிகாரங்களில் அவ்வப்போது ஒரு விநாடி கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இது லீப் விநாடி என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 30 அல்லது டிசம்பர் 31-ம் தேதிகளில் இந்த லீப் விநாடி சேர்க்கப்படும்.
கடந்த 1972-ம் ஆண்டில் லீப் விநாடி முதல்முறையாக அறிமுகமானது. அன்றுமுதல் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் வரும் 31-ம் தேதி லீப் விநாடி சேர்க்கப்படுகிறது. எனவே வரும் 2017 புத்தாண்டு பிறக்க கூடுதலாக ஒரு விநாடி நேரமாகும் என்று சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு (ஐஇஆர்எஸ்) அறிவித்துள்ளது.
லீப் விநாடி குழப்பத்தை தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி கூகுளின் சர்வர் கடிகாரம் ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாகச் சுற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
–
தலைப்பு : இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான உறவு
இந்தியா நேபாலுக்கு மின்சாரம் வழங்குகிறது
ஜனவரி 2017 முதல் இந்தியா நேபாலுக்கு கூடுதலாக 80 மெகாவாட் மின்சாரத்தினை வழங்க தயாராக உள்ளது. இதன்படி, இந்தியாவிடமிருந்து நேபால் சுமார் 400 மெகாவாட் அளவிற்கு மொத்த மின்சாரத்தினை பெறுகிறது.
இந்தியாவின் முசாபார்பூர் வழியாக நேபாலில் உள்ள Dhalkebar மூலம் நேபால் மின்சாரத்தினை பெறுகிறது.
_
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
Bharat Interface for Money (BHIM)
பிரதமர் நரேந்திர மோடி, ஆதார் அடிப்படையிலான மொபைல் பயன்பாடான Bharat Interface for Money – யை தொடங்கி வைத்தார். இந்த பயன்பாடு டாக்டர் அம்பேத்கர் நினைவாக பெயரிடப்பட்டது.
ஒருங்கிணைந்த பரிவர்த்தனைகளுக்காகவும் மற்றும் யுஎஸ்எஸ்டி கட்டணம் முறைகளுக்காகவும் இப்பயன்பாடு ஒரு எளிமைப்படுத்தப்பட்ட கட்டணம் தளமாக Bharat Interface for Money வடிவமைக்கப்பட்டுள்ளது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்
கலைஞர் சுதர்சனின் சாண்டா லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது
மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களின் சாண்டா கிளாஸ் மணற்சிற்பமானது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது உலகின் மிகப்பெரிய மணல் சிற்பம் கருதப்படுகிறது.
பட்நாயக் பற்றி:
அவர் ஒடிசாவின் பூரியில் பிறந்தார். அவர் ஏழு வயதில் இருந்து படங்களை மணல் சிற்பங்களாக வடிவமைக்க தொடங்கியுள்ளார்.
மேலும் நூற்றுக்கணக்கான மணல் கலை சிற்பங்களை வடிவமைத்துள்ளார். அவர் 2014 ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
[/vc_column_text][vc_column_text]
For more Tnpsc current affairs in tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tnpsc current affairs in tamil and English on your Inbox.
Read Tnpsc current affairs dec in tamil and English. Download daily Tnpsc current affairs in tamil for TNPSC and Monthly compilation of Tnpsc current affairs in tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "Tnpsc current affairs in tamil – Dec. 31, 2016"