
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs Apr 27, 2017 (27/04/2017)
Download as PDF
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
அமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் (US Open Karate Championship) – இந்தியாவுக்கு 16 பதக்கங்கள்
லாஸ் வேகாஸில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
முக்கிய குறிப்புகள்:
இரண்டு வெவ்வேறு தனிப்பட்ட நிகழ்வுகளில், ஷீபலி அகர்வால் (Shaifali Agarwal), அபிஷேக் செங்குப்தா (Abhishek Sengupta) தங்க பதக்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்திய அணி இத்தொடரில் தங்கம் வென்றது.
மற்ற இந்திய அணி வீரர்கள் அபிஷேக் செங்குப்தா, ரந்தேஜ் சிங், ஹர்ச்சரன் சிங் சௌவன் மற்றும் ஷிபலி அகர்வால் ஆகியோர் சென்செய் கால்சி-யின் (Sensei Kalsi) கீழ் பயிற்சி பெறுகின்றனர்.
_
தலைப்பு : மாநிலங்களின் விவரம், தேசிய செய்திகள், மாஸ் மீடியா கம்யூனிகேஷன்
ஹரியானாவின் பாலப்கர் (Ballabhgarh) கிராமம் பல்ராம்கர் (Balramgarh) என மறுபெயரிடப்பட்டது
ஹரியானாவின் பாலப்கர் (Ballabhgarh) கிராமம், பல்ராம்கர் (Balramgarh) என மறுபெயரிடப்பட்டது என ஹரியானா அரசு அறிவித்தது.
மேலும் பாலப்கர் மற்றும் என்.ஐ.டி ஃபரிதாபாத் (NIT Faridabhad) சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு பல திட்டங்களையும் அறிவித்தது.
ஹரியானா அரசாங்கம், குர்கான் கிராமத்தை குறுகிராம் என (Gurugram) எனவும் மேவாத்-தை (Mewat as Nuh) நுஹ் எனவும் முன்பு மறுபெயரிட்டது.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
இந்தியாவின் ஸ்ரீஷ்தி கவுர் மிஸ் டீன் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்
வருடாந்திர அழகுப் போட்டியான மிஸ் டீன் யுனிவர்ஸ் 2017-ல், இந்தியாவில் இருந்து ஸ்ரீஷ்தி கவுர் (Srishti Kaur) உலகெங்கிலும் இருந்து வந்துள்ள 25 போட்டியாளர்களில் மிஸ் டீன் யூனிவெர்ஸ் 2017 பட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவை சேர்ந்த சமந்தா பியர் (Samantha Pierre) மற்றும் மெக்ஸிகோவின் ஆரி டிராவா (Ary Trava) இந்த நிகழ்வில் மற்ற இரண்டாம் நிலை போட்டியாளர்கள் ஆவார்கள்.
_
தலைப்பு : இந்தியாவும் அதன் அயல்நாட்டு நாடுகளும்
சீனாவின் முதல் உள்நாட்டு விமான போர் கப்பலின் பயணம் தொடங்கப்பட்டது
சீனா தனது முதல் உள்நாட்டு விமான போர் கப்பலினை சீனாவின் Liaoning மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான டைலன் (Dailan)ன் திறந்த நீரில் அறிமுகப்படுத்தியது.
முக்கிய குறிப்புகள்:
இந்த புதிய கேரியர் விமானம் 50,000 டன்கள் அளவுள்ள பொருட்களை இடமாற்றம் செய்ய பயன்படுகிறது.
அதாவது இந்த வகை 001-A என்பது நடுப்பகுதி அளவிலான போர்க்கப்பல் ஆகும்.
இது 70,000 டன்னுக்கு மேலாக இயங்கும் அமெரிக்க மூலம் இயக்கப்படும் சூப்பர் கேரியர் விமான கப்பல்களை விட சிறியதாக உள்ளது.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
சர்வதேச சாலை சம்மேளனம் (IRF) இந்தியா 18 வது உலக சாலை சந்திப்பு (WRM 2017)-னை நடத்தும் என அறிவித்தது
இந்தியா 18 வது உலக சாலை சந்திப்பு (World Road Meeting) (WRM 2017) நிகழ்ச்சியை நவம்பர் 13, 2017 இல் நடத்துகிறது.
உலக சாலை சந்திப்பின் கருப்பொருள் (WRM 2017): “Safe Roads and Smart Mobility : The Engines of Economic Growth”.
முக்கிய குறிப்புகள்:
சாத்தியமான முதலீட்டாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் WRM ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.
மேலும் இந்தியாவில் உள்ள நிரந்தரமான வாய்ப்புகளில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கிறது.
மேலும் கூடுதலாக, உலகம் முழுவதும் இருந்து சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் மற்றும் இதனை பற்றிய ஆராச்சிகள் பற்றியும் விவரங்களை பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு தளமாக இருக்கும்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current Affairs Apr 27, 2017"