
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs Apr 28, 2017 (28/04/2017)
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
முதல் இந்திய நகரத்திற்கு Pierre L’enfant சர்வதேச திட்டமிடல் சிறப்பு விருது -2017 (Pierre L’enfant International Planning excellence award)
அமெரிக்க திட்டமிடல் சங்கம் (APA), ஆனது 2017ம் ஆண்டின் Pierre L’enfant சர்வதேச திட்டமிடல் சிறப்பு விருதினை இந்திய நகரமான புவனேஷ்வர் நகரத்திற்கு வழங்கியுள்ளது.
இவ்விருதினை பெரும் முதல் இந்திய நகரம் புவனேஷ்வர் ஆகும்.
நகர திட்டமிடல் செயல்பாட்டில், அதன் நல்ல மற்றும் மேம்பட்ட நகர திட்டமிடல்காகவும் மற்றும் அதன் பணிகளில் குடியிருப்பாளர்களையும் சிறப்பாக ஈடுபட வைத்தாலும் ஸ்மார்ட் நகரம் புபனேஷ்வர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
Pierre L’enfant – பியரி “பீட்டர்” சார்லஸ் எல்’என்ஃபான்ட் என்பவர் ஒரு பிரஞ்சில் பிறந்த ஒரு அமெரிக்கர் ஆவார். இவர் கட்டிட மற்றும் சிவில் பொறியியலாளராக இருந்தார்.
அவர் வாஷிங்டன் வீதிகளின் வடிவமைப்பை வடிவமைத்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.
அமெரிக்க திட்டமிடல் சங்கம் (APA), சர்வதேச திட்டமிடலில் சிறந்து விளங்குகியதற்காக L’Enfant-யை கவுரவிக்கும் பொருட்டு இவ்விருதை உருவாக்கியுள்ளது.
_
தலைப்பு : பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு
அக்னி III பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஏவுதல் வெற்றி
ஒடிசா கரையோரத்திலிருந்து அப்துல் கலாம் விண்தளத்திலிருந்து அக்னி -3 பாலிஸ்டிக் ஏவுகணை 3,000 கிலோமீட்டர் தூரத்தை நோக்கி செலுத்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இந்த ஏவுகணை 3000 கி.மீ. முதல் 5000 கி.மீ. வரை செயல்படுத்த முடியும். மேலும் இதனை வழக்கமான மற்றும் 1.5 டன் வரை அணு ஆயுதங்களை தாங்கி செல்லவும் உபயோகப்படுத்தலாம்.
_
தலைப்பு : மாநிலங்களின் விவரம், பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்
உத்தரபிரதேச அரசாங்கம் பதினைந்து பொது விடுமுறைகளை ரத்து செய்தது
உத்தரபிரதேச அரசு கல்வி நிறுவனங்களில், புகழ்பெற்ற நபர்களின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டுகளை நினைவுகூரும் 15 பொது விடுமுறை தினங்களை ரத்து செய்தது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவை மாநிலத்தின் அமைச்சரவை எடுத்தது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
இந்திய தொழிலதிபர் குயின்ஸ் எண்டர்பிரைஸ் விருது (Queen’s Enterprise Award) வென்றார்
இங்கிலாந்து வர்த்தக, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, பிரிட்டனில் உள்ள இந்திய தொழிலதிபரின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் சிறந்த பங்களிப்புக்காக குயின்ஸ் எண்டர்பிரைஸ் விருதினை (Queen’s Enterprise Award) இங்கிலாந்து வழங்கியது.
கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிக்காவின் இந்திய தொழிலதிபர் யூசுப் அலி எம்.ஏ. (Yusuff Ali M.A) அவர்களுக்கு குயின்ஸ் எண்டர்பிரைஸ் விருது 2017 (Queen’s Enterprise Award) வழங்கப்பட்டது.
அவர் அபுதாபி தலைமையிடமாக கொண்டுள்ள EMKE லூலு குழுமங்களின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
இந்த விருது பற்றி:
ராணி எலிசபெத் II (Queen Elizabeth II) அவர்கள் தனது பிறந்த நாள் விழாவில், இந்த விருதினை வருடாந்திர கௌரவ விருதாக சிறந்த நிறுவங்களுக்கு அளித்து வருகிறார்.
இந்த விருதுகள், அனைத்து நிறுவனங்களையும் கண்டுபிடிப்பு துறைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சமூக இயக்கங்கள் மூலம் அதன் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
வாணி ஜெயராம் – கந்தசாலா தேசிய விருது (Vani Jairam – Ghantasala national award)
கந்தசாலா தேசிய கலை அகாடமி நிறுவப்பட்ட கந்தசாலா தேசிய விருதுக்கு பின்னணி பாடகி வாணி ஜெய்ராம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிருஷ்ணரை பாராட்டி பாடிய மீராபாய் பாடல்களை பாடியமைக்காக இவர் இந்தியாவில் பெரிதும் அறியப்படுகிறார்.
இந்த விருது பற்றி:
தெலுங்கு உலகில் மூன்று தசாப்தங்களாக சினிமாவை ஆட்சி செய்தவரான புகழ்பெற்ற பாடகரான கந்தசாலா வெங்கடேஸ்வர ராவின் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டது.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current Affairs Apr 28, 2017"