
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs april 14, 2017 (14/04/2017)
தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள்
IBBIன் புதிய உறுப்பினர்
2017 ஏப்ரல் 13 ம் தேதியன்று புது தில்லியில் Insolvency and Bankruptcy Board of India (IBBI)-ன் முழுநேர உறுப்பினராக முகுளிதா விஜயவர்கியா (Mukulita Vijayawargiya) நியமிக்கப்பட்டார்.
முக்கிய குறிப்புகள்:
சட்டத்தின் பல்வேறு துறைகளில் விஜயவர்த்கியா அவர்களுக்கு 35 வருட அனுபவம் கொண்டிருக்கிறார்.
சட்டமன்றத்தில், 100 க்கும் மேற்பட்ட சட்டமன்றத் திட்டங்களை தயாரிப்பதில் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அவர் முன்னர் Insolvency and Bankruptcy Board of India (IBBI)ன் உறுப்பினராக இருந்தார்.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்டமன்றத்தில் கூடுதல் செயலாளர் என்ற வகையில், Insolvency and Bankruptcy Code 2016ன் வரைவு சட்டத்திற்கு அவர் ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்.
அவர் இந்திய சட்ட சேவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
_
தலைப்பு : சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்
அம்பேத்கர் ஜெயந்தி – ஏப்ரல் 14 – நீர் தினம்
டாக்டர் பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் 126 வது பிறந்த நாளை அம்பேத்கர் ஜெயந்தி என்று 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.
அவர் ஒரு இந்திய நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவர் நவீன பெளத்த இயக்கத்தை ஊக்கப்படுத்தினார்.
அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை எனவும் இந்திய அரசியமைப்பினை உருவாக்கியவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
நீர் தினம்:
அம்பேத்கர் பிறந்த நாளில் ஏப்ரல் 14 ம் தேதி “நீர் தினம்” ஆக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.
விலைமதிப்பற்ற இயற்கை வள மேலாண்மையை மக்கள் உணர்தல் கொள்ளுதல் பொருட்டு நீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அம்பேத்கர் அவர்கள், அரசியலமைப்பை உருவாக்குவதில் மிகப்பெரும் பொறுப்பில் வகித்ததை தவிரவும் நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு அனைத்து இந்திய கொள்கையை உருவாக்குவதிலும் அம்பேத்கர் பொறுப்பாளராகவும் இருந்தார்.
_
தலைப்பு : இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்
ஆபரேஷன் Meghdoot – ஏப்ரல் 13
இந்திய ஆயுத படைகள் செயல்பாட்டிற்கான ஒரு ஆபரேஷன் Meghdoot என பெயரியப்பட்டு ஏப்ரல் 13 ம் தேதி 33 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
சியாச்சின் பனிப்பாறைக்குள் மலை ஏறுவதை பாகிஸ்தான் அனுமதித்தபோது, சியாச்சின் மீது இந்தியா ஒரு நெருக்கமான கண்காணிப்பை வைத்திருக்க வேண்டியிருந்து இது 1984 இல் தொடங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சென் பனிப்பாறையை கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் இந்திய இராணுவ நடவடிக்கையினால் அந்தப்பகுதியின் கட்டுப்பாட்டைப் பெற்றது.
சியாச்சின் (Siachen) பற்றி:
சியாச்சின் பனிப்பாறை 76.4 கி.மீ. நீளமானது மற்றும் 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது.
இது வட மேற்கு இந்தியாவின் காராகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
_
தலைப்பு : மாநிலங்கள், அரசு, நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய விவரங்கள்
ஹரியானா அரசாங்கத்தால் துர்கா ஆபரேஷன் தொடங்கப்பட்டது
ஹரியானா அரசாங்கம் ‘ஆபரேஷன் துர்கா’வை மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என துவக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ், பெண்களுக்கு எதிராக குற்றங்களை செய்கின்ற சமூக விரோத சக்திகளை ஆராய்வதற்காக ‘பறக்கும் அணி’ அந்த பகுதிகளை ரோந்து செய்கிறது.
ஹரியானா முதலமைச்சர் திரு. மனோகர் லால் கத்தாரால் (Mr. Manohar Lal Khattar) இந்த குழு உருவாக்கப்பட்டது.
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள், மாநிலங்களின் சுயவிவரம்
இமாச்சலப் பிரதேசத்திற்கான கிருஷி கர்மன் விருது (Krishi Karman Award)
மத்திய வேளாண் அமைச்சகம், உணவு தானியங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்காக Krishi Karman Award 2015-16 க்கு இமாச்சலப் பிரதேச மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலம் இதை தவிர சாகுபடி, பல்வகை பயிர், நுண் பாசனம், கரிம வேளாண்மை மற்றும் மண் சுகாதார மேலாண்மை போன்ற துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் கோதுமை உற்பத்தியில் அதிகரிப்பிற்க்காக 2011-12ஆம் ஆண்டிற்கான ஹிமாச்சல மாநிலத்திற்கு கிருஷி கர்மான் விருது வழங்கப்பட்டது.
மற்றும் 2014-15 ஆம் ஆண்டில் அதிக உணவு தானிய உற்பத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது பற்றி:
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றில் உணவு தானியங்கள் மற்றும் தனிப்பட்ட பயிர்களிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு 2010-11 ஆம் ஆண்டில் இருந்து கிருஷி கர்மன் விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டின் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் சிறந்த செயல் மாநிலங்களுக்கு Krishi Karman விருது வழங்கப்படுகிறது.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil Current Affairs april 14, 2017"