
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil current affairs april 17, 2017 (17/04/2017)
தலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, மாநிலங்களின் சுயவிவரம்
மே 1 முதல் மத்திய பிரதேசத்தில் பாலிதீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன
மே 1 முதல் மாநிலத்தில் பாலிதீன் பைகள் மீது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் (Shivraj Singh Chouhan) மொத்த தடையை அறிவித்தார்.
முக்கிய குறிப்புகள்:
பெங்களூரு, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், கோவா மற்றும் மேற்கு வங்காளம்.
இந்த மாநிலங்களில் இந்தியாவில் ஏற்கனவே பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
_
தலைப்பு : இந்திய கலாச்சார விழாக்கள்
ரங்கோலி பிஹு 2017 அசாமில் தொடங்கியது
ரோகோலி பிஹு (Rangoli Bihu) அல்லது ஹாத் பிஹு (Haat Bihu) என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹு (Bohag Bihu) அசாமில் கொண்டாடப்படும் ஒரு ஏழு நாள் நீண்ட திருவிழா ஆகும்.
பாரம்பரிய அஸ்ஸாமி புதிய ஆண்டு காலண்டர் படி, இத்திருவிழா ஏப்ரல் 15, 2107ல் தொடங்கி ஏப்ரல் 21 2017 வரை கொண்டாடப்படுகிறது.
Bohag Bihu ஏழு நாட்களில் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது.அவையாவன : சோட் பிஹு, கோரு பிஹு, மன்ஹூ பிஹு, குதும் பிஹு, சென்ஹீ பிஹு, மேலா பிஹு மற்றும் சேரா பிஹு. (Chot Bihu, Goru Bihu, Manuh Bihu, Kutum Bihu, Senehi Bihu, Mela Bihu and Chera).
முக்கிய குறிப்புகள்:
இந்த ஒவ்வொரு பண்டிகையும் நெல் பயிர்களின் வேளாண் சுழற்சியை குறிக்கும் வகையில் வரலாற்று அங்கீகாரம் பெற்றது.
பிஹூ விழா ஒரு வருடத்தில் வெவ்வேறு வேளாண் கட்டங்களில் மூன்று முறை கொண்டாடப்படுகிறது.
இவை போஹாக் பிஹு, கொங்கலி பிஹு மற்றும் மாக் பிஹு (Bohag Bihu, Kongali Bihu, and Magh Bihu).
_
தலைப்பு : புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறைகள்
இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம்
இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக, போபாலில் ஹபீப்கஞ்ச் நிலையம் ஆனது அதை இயக்க வேண்டுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரயில் நிலைய கட்டடம் விமான நிலையங்களின் பகுதிகளுடன் இணையுமாறு கட்டப்படுகிறது.
மேலும் இந்த ரயில் நிலையங்கள் இந்திய ரயில்வே துறை மூலமே இயக்கப்படும்.
அந்த தனியார் துறையின் பெயர்:
பன்சல் கட்டுமான வேலைகள் மற்றும் பிரகாஷ் அஸ்பால்டிங் மற்றும் டாக் நெடுஞ்சாலைகள் ஒன்றாக இணைந்து இந்த தனியார் துறையானது ஒரு கூட்டமைப்பு மூலமாக உருவாகிறது.
இந்த சிறப்பு நிறுவனத்திற்கு “Bansal Pathways Habibagnj Private Ltd” என்று பெயரிடப்பட்டுள்ளது.
_
தலைப்பு : பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
மூன்றாம் பாலினம் உச்ச நீதிமன்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது
உச்ச நீதிமன்றம் ஹிஜராஸ் அல்லது திருநங்கைகளுக்கான “மூன்றாவது பாலின” நிலையை உருவாக்கியது.
முன்னதாக, அவர்கள் தங்கள் பாலினத்திற்கு எதிராக ஆண் அல்லது பெண் என எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது.
முக்கிய உண்மைகள்:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாவது பாலின மக்கள் OBCs ஆக கருதப்படுவார்கள்.
மேலும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை மூன்றாவது பாலின மக்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவராக நடத்த கேட்டுக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றம் மேலும் அவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படும் மற்றும் அவர்கள் மூன்றாவது பாலின வகை சேர்ந்தவர்கள் என்றதன் அடிப்படையில் வேலை கொடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
இந்திய பொறியியலாளரான திருப்தி ஜெயின் (Trupti Jain) அவர்களுக்கு கார்ட்டியர் மகளிர் ஊக்குவிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இந்திய சுற்றுச்சூழல் பொறியியலாளரான “ட்ருப்தி ஜெயின்” (Trupti Jain) ஆசியா-பசிபிக் லொரேட்-ன் இந்த ஆண்டு “கார்டியர் மகளிர் முன்னுரிமை விருதுகள்”-ளை வென்றுள்ளார்.
இவர் தனது விவசாய பண்ணைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு நீர் மேலாண்மை தீர்வுகளுடன் கூடிய பணியினை செய்தற்காகவும் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்குக்கு எதிராக சிறிய விவசாயிகளை பாதுகாத்தல் போன்ற செயல்களுக்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
அர்விந்த் சின்ஹாவுக்கு (Arvind Sinha) ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் லீடர்ஷிப் விருது
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானூர்தி பொறியியலாளரான அர்விந்த் சின்ஹா அவர்கள் அமெரிக்க ஹெலிகாப்டர் சொசைட்டி (AHS) இன்டர்நேஷனல் மூலம் ‘உலகின் சிறந்த ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் லீடர்ஷிப் விருது’ வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
முக்கிய குறிப்புகள்:
AHS, செங்குத்து விமான தொழில்நுட்பத்தில் அவரது சிறந்த பங்களிப்பிற்காக Lt கோல் டாக்டர் அர்விந்த் சின்ஹா (Lt Col Dr Arvind Sinha) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில் அமெரிக்காவில் இந்த விருது பெற்ற சின்ஹா, மே மாதம் 2016 ஆம் ஆண்டில் ஏ.எச்.எஸ். கவுன்சிலர்-ன் மரியாதைக்குரிய மனிதர் பட்டத்தை வென்று பாராட்டப்பட்டுள்ளார்.
அவர் ஆஸ்திரேலிய இராணுவம் மற்றும் கடற்படை விமானத் தளம் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளில் பணி புரிகிறார்.
அவர் தந்திரோபாய ஏரோஸ்பேஸ் அமைப்புகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை இயக்கும் வேலைகளில் நிபுணர் ஆவார்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
வெப்ப மண்டல சூறாவளி “மாருதா” வங்காள விரிகுடாவில் உருவாகியது
வங்காளத்தின் கிழக்கு-மத்திய கடலோரப்பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெப்பமண்டல சூறாவளி ‘மாருதா’ வாக மாறிவிட்டது.
அனைத்து மீன்பிடி படகுகளும் மற்றும் வட கடல் மற்றும் ஆழமான கடல் ஆகிய பகுதிகளிலுள்ள பயணிகள் அனைவரும் கடற்கரைக்கு அருகில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
மேலும் அறிவிப்பு வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "TNPSC Tamil current affairs april 17, 2017"