
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil current affairs april 19, 2017 (19/04/2017)
தலைப்பு : மாநிலங்களின் விவரங்கள், தேசிய செய்திகள், செய்திகளில் இடங்கள்
கோரக்பூர் மற்றும் ஆக்ரா விமானநிலையின் பெயர் மாற்றம்
உ.பி. அரசு கோரக்பூர் மற்றும் ஆக்ரா விமான நிலையங்களின் பெயரை மாற்றியுள்ளது.
மேலும் மாறுபட்ட திறன்கொண்டவர்களின் நலன்சார்ந்த துறைக்கும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட பெயர்கள்:
கோரக்பூர் விமான நிலையம், மஹாயோகி கோரக்பாத் விமானநிலையம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
இது நாத் துறவி இயக்கத்தின் நிறுவனரை குறிக்கும் பொருட்டு இப்பெயரிடப்பட்டுள்ளது.
ஆக்ரா விமான நிலையம், பண்டிட் தீன் தயால் உபாத்யா அவர்களை குறிக்கும் பொருட்டு பண்டிட் தீன் தயால் உபாத்யா விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மாறுபட்ட திறன்கொண்டவர்களின் நலன்சார்ந்த துறைக்கு ‘திவ்யாங் ஜான் விகாஸ் முன்னேற்ற துறை’ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
சாஹித்த அகாடமி மொழிபெயர்ப்பு பரிசு 2016
ஆங்கில மொழிக்கான சாஹித்த அகாடமி 2016 மொழிபெயர்ப்புப் பரிசிற்காக ஸ்ரீ அன்ருதீன் வாசுதேவன் (Sri Anirudh Vasudevan) தனது மொழிபெயர்ப்பு புத்தகத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ பெருமாள் முருகனின் (Sri Perumaal Murugan) தமிழ் நாவலின் “மாதொருபாகன்” (Maadhorubagan) நாவலை ஆங்கில மொழியில் “One part Woman” என அவர் எழுதிய புத்தகம் மொழிபெயர்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
மேலே குறிப்பிட்டுள்ள மொழிபெயர்ப்பு பரிசு வென்றவர், 23 மொழிகளில் மற்ற வெற்றியாளர்களுடன் சேர்த்து 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும்.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் விருதுகள்
பாஸ்டன் மராத்தான்-னை பார்வை குறைபாடுள்ள இந்திய ஓட்டப்பந்தய வீரர் சாகர் பாஹ்டி பூர்த்தி செய்தார்
பெங்களூரை சேர்ந்த சாகர் பாஹ்தி (Sagar Baheti), வரலாற்று சிறப்புமிக்க பாஸ்டன் மராத்தானினை (Boston Maratihon) முடித்த முதல் பார்வை குறைபாடுள்ள இந்திய ஓட்டப்பந்தய வீரர் ஆனார்.
பாஸ்டன் மராத்தான் உலகின் பழமையானதும் மிகவும் போட்டிமிக்கதாகவும் மற்றும் தகுதி பெற கடினமான மராத்தான் ஆகவும் உள்ளது.
முக்கிய குறிப்புகள்:
பிரபல மராத்தான்னில் பங்கேற்ற 31 வயதான பாஹ்தி (Sagar Baheti) முதல் பார்வையற்ற இந்தியரானார்.
நான்கு மணி நேரத்திற்குள் ஏறக்குறைய 42.16 கி.மீ தூரத்தினை பாஹ்தி பூர்த்தி செய்தார்
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil current affairs april 19, 2017"