
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil current affairs april 21, 2017 (21/04/2017)
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
சிவில் சேவைகள் தினம் – ஏப்ரல் 21 – Civil Services Day
சிவில் சர்வீசஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது.
குடிமக்களுக்காக அரசு ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டதையும் மற்றும் பொது சேவை தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில், அகில இந்திய நிர்வாக சேவை பயிற்சி பள்ளியில் நியூ டெல்லி 1947 இல் மெட்ஸ்கால் ஹவுஸில், சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் தரப்பு வகுப்பாளர்களுக்கு பேச்சுரைத்ததும் நினைவு கொள்ளப்படுகிறது.
_
தலைப்பு : மாநிலங்களின் விவரங்கள், தேசிய செய்திகள், செய்திகளில் உள்ள இடங்கள்
ஜிஎம்ஆர் (GMR) ஹைதராபாத் விமானநிலையம் கார்பன் நடுநிலை சான்றிதழ் பெற்றது
சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) வழங்கும் கார்பன் நடுநிலை (நிலை 3+) சான்றிதழை ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் ACI இன் விமானங்களின் அங்கீகார திட்டத்தின் கீழ் வருகிறது.
இது ஒரு விமான நிலையத்தின் நிர்வகிக்கும் முயற்சிகள் மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் போன்றவற்றினை மதிப்பீட்டிற்காக எடுத்துக்கொள்கிறது.
ACI – ஏசிஐ பற்றி:
சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI), உலக விமான நிலைய அதிகாரிகளின் உலக வர்த்தக பிரதிநிதியாக உள்ளது.
இது 1991 இல் நிறுவப்பட்டு ACI விமான நிலையங்களின் நலன்களைக் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், தரநிலைகள், கொள்கைகள் மற்றும் விமானநிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை குறித்து மேம்படுத்துகிறது.
இந்த ACI உலகெங்கிலுமுள்ள பணி நியமங்களை உயர்த்துவதற்கு தகவல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
ஒரு இத்தாலிய தீவு மேயருக்கு யுனெஸ்கோவின் அமைதிக்கான பரிசு
இத்தாலிய தீவான லம்பேடுசாவின் (Lampedusa) மேயர், முதன்முறையாக யுனெஸ்கோவின் அமைதிக்கான பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் குசீ நிக்கோலிணி (Giusi Nicolini) அவர்களுக்கும் பிரெஞ்சு அரச சார்பற்ற நிறுவனமான SOS Mediterrannee உடன் சேர்ந்து இப்பரிசு வழங்கப்பட்டது.
இப்பரிசு, அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் மற்றும் அவர்களை கண்ணியமாக வரவேற்பதற்காகவும் பல உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் வழங்கப்பட்டது.
முதல் ஜனாதிபதியான ஐவரி கோஸ்டின் (Ivory Coast) பெயரிடப்பட்ட இப்பரிசு, சமாதான பரிசு, பெலிஸ் ஹூஃபௌட்-போஜின் அமைதி பரிசு (Félix Houphouët-Boigny Peace Prize) எனவும் அழைக்கப்படும்.
உயிர்களை “பாதுகாக்க, பராமரிக்க, மற்றும் சமாதான பெற” யார் உதவுகிறார்களோ அந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களை அங்கீகரிக்கும் பொருட்டு இது 1989 முதல் ஒவ்வொரு வருடமும் யுனெஸ்கோவால் வழங்கப்படுகிறது.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
மகாத்மா காந்தி அஞ்சல் தலைகள் ஐக்கிய ராஜ்யத்தில் ஏலத்தில் விற்பனையானது
மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்த 4 தொகுதிகளுடன் கூடிய அஞ்சல் தலைகள் சேர்ந்து ஐக்கிய ராஜ்யத்தில் ஒரு ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இந்த அஞ்சல் தலைகள் £ 500,000 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
நான்கு தொகுதி அஞ்சல் தலைகள் ஆஸ்திரேலியாவில் தனியார் சேகரிப்ப முதலீட்டாளருக்கு விற்கப்பட்டது.
இந்திய அஞ்சல் தலைகளுக்கு ஆஸ்திரேலியாவில் மிக அதிக விலை வழங்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
இந்திய அஞ்சல் தலைகள் குறிப்பாக அவை நான்கு தொகுதிகளுடன் அழகாக இருப்பதால் அவை அரிதாக உள்ளன.
தற்போது, 1948 காந்தியின் 10 ரூபாய் ஊதா பழுப்பு நிறத்தில் உள்ள அஞ்சல் தலை மற்றும் லேக் சேவை அஞ்சல் தலைகளில் 13 மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
இந்த பதின்மூன்று அஞ்சல் தலைகளும், ராணி எலிசபெத் (Queen Elizabeth II) II அவர்களுக்கு சொந்தமான ராயல் Philatelic தொகுப்பினில் நான்கு துண்டுகள் மற்றும் ஒரு நான்கு தொகுதிகளும் அடங்கும்.
ராயல் Philatelic சேகரிப்பு மையம் ஆனது உலகின் மிக பெரியதாக நம்பப்படுகிற மற்றும் மிகவும் மதிப்புமிக்க தனியார் அஞ்சல் தலை சேகரிப்பு நிறுவனம் ஆகும்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Tamil current affairs april 21, 2017"