fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs May 11, 2017

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 11, 2017 (11/05/2017)

 

Download as PDF

தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் – ஹர்பிரீத் சிங் (Harpreet Singh) 80 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்

மே 10 முதல் மே 14 வரை புது தில்லியிலுள்ள கே.டி. ஜாதவ் இன்டூர் ஸ்டேடியத்தில் (KD Jadhav Indoor Stadium), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2017 தொடங்குகிறது.

இந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா, மங்கோலியா ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தியாவின் பதக்கங்கள்:

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், கிரேகோ-ரோமன் 80 கிலோ பிரிவில் ஹர்பிரீத் சிங் (Harpreet Singh) வெண்கலத்தை வென்றார்.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள்

Moon Jae-in மூன் ஜே-இன் தென் கொரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்

Moon Jae-in ஜனாதிபதித் தேர்தலில் வென்றதன் மூலம் தென் கொரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

மார்ச் மாதம் ஒரு ஊழல் நடந்ததால் ஜனாதிபதி பார்க் ஜுன்-ஹை (Park Geun-hye), பதவியிலிருந்து விலக்கப்பட்டதால் இத்தேர்தல் நடத்தப்பட்டது.

_

தலைப்பு : செய்திகளில் உள்ள இடங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அன்டார்டிகாவில் உள்ள மைத்ரி ஆராய்ச்சி நிலையம் (Maitri Research station)

அன்டார்டிக்காவில் உள்ள மைத்ரி ஆராய்ச்சி நிலையத்தை அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் ஒரு புதிய ஆராய்ச்சி நிலையத்தை கட்ட இந்தியா முடிவு செய்துள்ளது .

மைத்ரி ஆராய்ச்சி நிலையம் பற்றி (Maitri Research station):

இந்திய அண்டார்டிக் திட்டத்தின் (Indian Antarctic Programme) ஒரு பகுதியாக, மைத்ரி ஆராய்ச்சி நிலையம் அண்டார்டிக்காவில் உள்ள இந்தியாவின் இரண்டாவது நிரந்தர ஆய்வு நிலையமாகும்.

முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் மூலம் இப்பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இந்திய அண்டார்க்டிக் திட்டம் (Indian Antarctic Programme) பற்றி:

இந்திய அண்டார்டிக் திட்டம் ஒரு பல ஒழுங்குமுறை மற்றும் பல நிறுவன திட்டம் ஆகும்.

இது இந்திய அரசின் புவியியல் அமைச்சகத்தின் தேசிய மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ், அண்டார்டிகாவினை ஆய்வு செய்து வளிமண்டலவியல், உயிரியல், பூமி, வேதியியல், மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய பிரிவுகளில் 30 விஞ்ஞான ஆராய்ச்சிகளை இந்தியா மேற்கொண்டு நடத்தியது.

_

தலைப்பு : பொது நிர்வாகம், அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பு (Integrated Case Management System) பிரதமரால் தொடங்கப்பட்டது

இந்த திட்டத்தின் கீழ், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் அனைத்து விவரங்களின் முக்கியமான உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தும் காகிதமற்ற முறை அல்லது டிஜிட்டல் முறையாக மாற்றப்படவுள்ளது.

காகிதமற்ற முறை அல்லது டிஜிட்டல் முறையாக மாற்றப்படுவதற்கு கீழ் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய பதிவுகளை மின்னணு முறையில் சேகரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

உலக இடம்பெயரக்கூடிய பறவை நாள் 2017 World Migratory Bird Day

உலக இடம்பெயரக்கூடிய பறவை நாள் 2017, சனிக்கிழமை, 13 மே அன்று தொடங்கி 14 மே ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைகிறது.

உலக இடம்பெயரக்கூடிய பறவை நாள் புலம்பெயர்ந்த பறவைகளின் பாதுகாப்பு தேவை பற்றியும் அவைகளின் வாழ்விடங்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

மேலும் அவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், அவைகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தேவை பற்றியும் புரிந்து கொள்ளவும் அவைகளை பாதுகாக்கவும் இது உதவுகிறது.

இந்த உலகப் பறவை பறவை நாள் 2017 உட்கரு: “அவைகளின் எதிர்காலம் நம் எதிர்காலம் – குடிபெயர்ந்த பறவைகள் மற்றும் மக்களுக்காக ஒரு ஆரோக்கியமான உலகம்” –  “Their Future is Our Future – A Healthy Planet for Migratory Birds and People”.

[/vc_column_text][/vc_column][/vc_row]

0 responses on "TNPSC Tamil Current Affairs May 11, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.