
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs May 22, 2017 (22/05/2017)
Download as PDF
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
அமெரிக்காவில் நடந்த அறிவியல் போட்டி : இந்திய மாணவருக்கு முதல் பரிசு
அமெரிக்காவில் நடந்த பள்ளிகளுக்கான உலகின் மிகப் பெரிய அறிவியல் போட்டியில் இந்திய சிறுவன் சிறப்பான படைப்பை சமர்ப்பித்து முதல் பரிசைத் தட்டிச் சென்றான்.
சென்னை பள்ளியைச் சேர்ந்த சகோதர, சகோதரியும் மீனவர்களுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து அசத்தினர்.
அமெரிக்காவின் வாஷிங் டனில் பள்ளிகளுக்கான உலகின் மிகப் பெரிய அறிவியல் போட்டி கடந்த ஒருவாரமாக நடந்து வந்தது.
இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,700 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் பிரசாந்த் ரங்கநாதன் (Prashant Ranganathan) என்ற மாணவரும் கலந்து கொண்டார்.
இவர் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் நடந்த போட்டியில் தனது படைப்பை சமர்ப்பித்தார். விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் மண் சார்ந்த நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது குறித்த படைப் புக்கு முதல் பரிசு கிடைத்தது.
இவரது படைப்பு பூச்சிக் கொல்லி களால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக களையக் கூடியது. இதன் காரணமாகவே இவருக்கு முதல் பரிசு கிடைத்தது.
சென்னை பள்ளியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளான சாய்ராந்தி சத்யநாராயணன் மற்றும் சச்சேத் சத்யநாராயணன் இருவரும் இரவில் மீன்பிடி படகில் செல்லும் மீனவர்கள் கீயர்பாக்ஸ் மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்வதற்கான புதிய கண்டு பிடிப்பை சமர்ப்பித்தனர். இவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.
_
தலைப்பு: விளையாட்டு மற்றும் விருதுகள்
சீனாவில் உலா செங்டூ-வில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்
சீனாவின் செங்டூவில் நடைபெற்ற ஆசிய பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆர். வைஷாலி பெண்களுக்கான பட்டத்தை வென்றார்.
அதேப்போல், சீனாவை சேர்ந்த Yuxin Song-வினை இறுதி சுற்றில் வெற்றி பெற்று பத்மினி ராவூத் ஏழு புள்ளிகளைப் பெற்றார்.
சவுமியா சுவாமிநாதன் (5.5) 12 வது இடமும் மேரி ஆன் கோம்ஸ் 16 வது இடமும் பிடித்தார்கள்.
_
தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகள், நிகழ்வுகள்
கலாம்க்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு NASA புதிய வகை இனங்களுக்கு Solibacillus kalamii என பெயரிடுகிறது
நாசாவின் விஞ்ஞானிகள், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய உயிரினத்திற்கு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களை நினைவு கூறும் பொருட்டு Solibacillus kalamii என பெயரிட்டனர்.
ஒரு வித்தினை உருவாக்கும் பாக்டீரியாவின் புதிய உயிரினம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னமும் பூமியில் காணப்படவில்லை.
நாசாவின் முதன்மையான ஆய்வுக்கூடமாக விளங்கும் இடை-கிரக பயணத்தில் (inter-planetary travel) பணிபுரிவதற்காக இயங்கும் ஜெட் புரோபிலியன் ஆய்வகத்தில் (JPL) உள்ள ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) வடிகட்டிகளில் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி ஆன மறைந்த நமது அப்துல் கலாமை அவர்களை நினைவு கூறும் பொருட்டு சலிபாகிலஸ் கலாம் (Solibacillus kalamii) என பெயரிட்டது நாசா குழுவினர்கள்.
கலாம் தனது ஆரம்ப காலத்தில் 1963 இல் நாசாவில் பயிற்சியில் இருந்தார்.
அதற்க்கு பின்னர்தான் இந்தியாவின் முதல் ராக்கெட்-துவக்க வசதியை கேரளாவில் உள்ள தும்பாவின் மீன்பிடி கிராமத்தில் நிறுவினார்.
_
தலைப்பு : புதிய நியமனங்கள், யார் இவர்?, நாட்குறிப்பு நிகழ்வுகள்
ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரவ்ஹானி மீண்டும் வெற்றி
ஈரான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி (Hassan Rouhani) வெற்றிப் பெற்றுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வாக்காளர்கள் அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானிக்கும் (68), எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் ரைசிக்கும் (56) இடையே நேரடி போட்டி நிலவியது.
அதிக அளவில் மக்கள் வாக்குகளை பதிவு செய்ய முன்வந்ததால், சில மணிநேரங்கள் வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டது.
_
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
ஆசிய யோகா போட்டியில் வென்ற கோவை மாணவிக்கு பாராட்டு
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் வென்ற கோவை மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கோவை பார்க் குளோபல் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி(14). இவர் தாய்லாந்து நாட்டில் கடந்த 13, 14-ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றார்.
இதில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற வைஷ்ணவி, 2 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
வைஷ்ணவை பற்றி:
பார்க் குளோபல் ஸ்கூலில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியான வைஷ்ணவி யோகா ராணி மற்றும் யோகா நாட்ச்ராத்ரா, இந்திய யோகா சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் இளம் சாதனையாளர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
_
தலைப்பு: சமீபத்திய நிகழ்வுகள்
மும்பை மற்றும் கர்மாலி இடையே இந்தியாவின் முதல் தேஜஸ் எக்ஸ்பிரஸ் அறிமுகம்
இந்தியாவில் முதல் முறையாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மும்பை (Mumbai) மற்றும் கோவாவின் கர்மலி (Karmali) இடையே அதிக வேக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இருக்கிறது.
மும்பை மற்றும் கர்மாலி இடையே தீவிர நவீன வசதிகளுடன் 200 கி.மீ. வேகத்தில் ஓடும் இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்படுகிறது. முதல்முறையாக தானியங்கி கதவுகளுடன் வரும் பயணிகள் ரயிலாகவும்
இதனை குறிப்பிடலாம். உட்புறத்தில் இருக்கைகள் மிக தாராள இடவசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனால், நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணிக்கலாம்.
[/vc_column_text][/vc_column][/vc_row]
1 responses on "TNPSC Tamil Current Affairs May 22, 2017"