
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.18, 2016 (18/09/2016)
அதிநவீன கப்பல் “மர்மகோவா” இந்திய கடற்படையினால் வெள்ளோட்டம் விடப்பட்டது
இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை அழிப்பு “மர்மகோவா” போர்க்கப்பல் மும்பையில் முதன்முறையாக அரபிக் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
இந்த கப்பல் தேவையான சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு கடற்படையில் இணைக்கப்பட்டு “INS மர்மகோவா” என்று அழைக்கப்படும்.
மும்பையில் மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டப்பட்ட இக்கப்பலை போன்ற மேலும் நான்கு போர்கப்பல்களை 2024-க்குள் எம்டிஎல் தயாரித்து கடற்படைக்கு வழங்க உள்ளது.
இந்த கப்பல் INS விசாகப்பட்டினம் வகை கப்பல் ஆகும். இத்திட்டத்தின் முதல் கப்பலின் வெள்ளோட்டம் கடந்த 2015, ஏப்ரலில் தொடங்கி வைக்கப்பட்டது.
மலையாளத் திறனாய்வாளர் எம். லீலாவதி மோஹன சுவர்ண முத்ரா விருது பெற்றார்
தலைசிறந்த மலையாள விமர்சகர் மற்றும் கல்வியாளர் டாக்டர் லீலாவதி (M.LEELAVATHY) மதிப்புமிக்க 2016-ம் ஆண்டிற்க்கான மோஹன சுவர்ண முத்ரா விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது சிறுகதை எழுத்தாளர் மோஹனன் நினைவாக நிறுவப்பட்டது.
தொழில் முதலீட்டீல் ஆந்திரப் பிரதேசம் முதலிடம்
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, ஆந்திரப் பிரதேசம் மற்ற மாநிலங்களை விட அதிகம் முதலீடு செய்யும் மாநிலமாக உள்ளது.
முந்தைய ஆண்டு இந்த பிரிவில் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்தியாவுடனான ஹைதராபாத்தின் ஒருங்கிணைப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது
அனைத்து அரசியல் கட்சிகளும் இந்நாளை விடுதலை நாள், இணைப்பு நாள் போன்ற பல்வேறுபட்ட பெயர்களில் இத்தினத்தை கொண்டாடுகிறது.
செப்டம்பர் 17, 1948 நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஹைதெராபாத் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாள்.இந்நாளில்தான் நிஜாம் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்து அப்பகுதி இந்திய குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.18, 2016 (18/09/2016)"