
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Nov. 10, 2016 (10/11/2016)
தலைப்பு : சர்வதேச விவகாரங்கள் – செய்திகளில் தலைசிறந்த நபர்கள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
குடியரசுக் கட்சி டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அவர் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன்-யை தோற்கடித்துள்ளார்.
தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழலியல் – பல்லுயிர் பிரச்சினைகளை சமாளிக்க விழிப்புணர்வு திட்டம்
வேளாண் பல்லுயிர் மேலாண்மையில் தில்லி பிரகடனம்
சமீபத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச வேளாண் பல்லுயிர் மாநாட்டில் வேளாண் பல்லுயிர் மேலாண்மைக்காக புது தில்லி பிரகடனத்தை ஏற்றுள்ளது.
பிரகடனத்தின் முக்கிய குறிப்புகள் :
வேளாண் பல்லுயிர் பிரகடனம் ஆனது வறுமை ஒழிப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஆரோக்கியம், பாலின பங்கு மற்றும் கூட்டாண்மை தொடர்பான SDGs இலக்குகளை அடையும் நோக்கில் தங்களின் நிலையான பயன்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து சமாளிக்கவும் இந்த அறிவிப்பு அழைப்பு விடுக்கின்றது.
இந்த அறிவிப்பு விவசாய ஆண்கள் மற்றும் பெண்கள், மேய்ப்பர்கள் மற்றும் பிற பழங்குடி மற்றும் கிராமப்புற சமூகங்கள் மற்றும் ஒரு உணவு மற்றும் பருவநிலை மாற்றத்தால் தாக்கப்படும் உலகம் அதன் பாதுகாப்பு மற்றும் அதனை பாதுகாப்பதில் அவர்களின் முக்கிய பங்கு தொடர்பாக வேளாண் பல்லுயிர் பாரம்பரிய அறிவிற்கு முக்கியத்துவம் அளிக்க இந்த அறிவிப்பு அங்கீகரிக்கிறது.
அது பாதுகாப்பு உத்திகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைபயன்படுத்த அழைப்பு விடுக்கின்றது.
இந்த மறு வலியுறுத்தல், பெருகிவரும் உணவு தேவை மற்றும் ஒவ்வொரு நாட்டின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உணவு மற்றும் வேளாண் தாவர, விலங்கு, நீர்வாழ் நுண்ணுயிர் மற்றும் பூச்சி மரபணு வளங்களை உலக பரிமாற்றம் செய்யும் அவசியத்தை உணர்த்துகிறது.
இது ஒரு வேளாண் பல்லுயிர் குறியீட்டினை செயல்படுத்தி அதனை பராமரித்தும் வந்தால் மற்றும் வேளாண் பல்லுயிர் குறித்த விவரங்களை கண்காணிப்பு செய்யவும் பாதுகாக்கவும் உதவும் என அறிவுறுத்துகிறது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை, உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கவும் அவசர நடவடிக்கைகளை வினையூக்கப்படுத்தவும் விரைவில் ஒரு ‘வேளாண் பல்லுயிர் ஆண்டு’ என்று அறிவிக்க போகிறது.
மேலும் இதனை பற்றி அறிந்துகொள்ள படிக்கவும் : https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-nov-07-2016/
தலைப்பு : நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
தொழில்முனைவோர்க்கான பிரதான் மந்திரி யுவ யோஜனா
திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோரின் அமைச்சகத்தின் 2 வது ஆண்டு அடித்தள நாளினை முன்னிட்டு, தொழில் முனைவோர்கள் கல்வி மற்றும் பயிற்சியினை எளிதில் பெறுவதற்கு பிரதான் மந்திரி யுவ யோஜனா-வினை திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோரின் அமைச்சகம் (MSDE) முன்னெடுத்துள்ளது.
இத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த திட்டம் இளைஞர்களிடையே தொழில் முனைவோர்க்கான ஒரு சூழலை அளவிட தொடங்கப்பட்டது.
அது 3050 நிறுவனங்கள் மூலம் 5 ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்கள் வரை தொழில் புரிய கல்வி மற்றும் பயிற்சியை இது வழங்கும்.
அது ஐந்து ஆண்டுகள் வரை புழக்கத்தில் இருக்கும்.
தலைப்பு : நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
Swastha Bharat – EK pehal / ஆரோக்கியமான இந்தியாவிற்கு ஆரம்பம்
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆரோக்கியமான இந்தியாவிற்கான துவக்கத்திற்காக பத்திரிகையை தொடங்கியது.
ஆரோக்கியமான இந்தியாவிற்கான துவக்க பத்திரிகை பற்றி :
அது ஒரு காலாண்டு பத்திரிக்கை மற்றும் அது சுகாதாரம் தொடர்பான தகவல்களை வழங்குவதிலும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது உதவுகிறது.
இப்பத்திரிகை சுகாதாரம் பற்றி வித்தியாசமான அம்சங்களை எடுத்துக்காட்டும் : அவையாவன :
பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதாரம், முதியோர் சுகாதாரம், பருவகால வியாதிகள், தினசரி ஊட்டச்சத்து தேவைகள், பாதுகாப்பான மருந்து நடைமுறைகள், வீட்டு வைத்தியம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் இன்னும் பல.
அது இலவசமாக வழங்கப்படும் மற்றும் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது மற்றும் 13 மற்ற மொழிகளில் அடுத்த பதிப்பு வெளியிடப்படும்..
தலைப்பு : நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு
நோ மோர் டென்ஷன் மொபைல் பயன்பாடு (No More Tension Mobile App)
சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், நோ மோர் டென்ஷன் மொபைல் பயன்பாட்டினை தொடங்கியுள்ளது.
இந்த பயன்பாடு பற்றி :
அது மன அழுத்தத்தை குறைப்பதற்கான மொபைல் பயன்பாடு ஆகும். இதன் பிரதான நோக்கமானது மன அழுத்தம், அதன் விளைவுகள், அதன் அறிகுறிகள், மற்றும் அதன் மேலாண்மை தொடர்பான விவரங்களை பயனாளிகளுக்கு வழங்க உள்ளது. அதன் மூலம் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
இந்த பயன்பாடானது, பயனாளிகள் தங்கள் மன நிலை அளவை அளவிடவும் மற்றும் தங்கள் வாழ்வில் இருந்து மன அழுத்தத்தை குறைக்கவும் யோகா மற்றும் தியானம் போன்ற பல்வேறு உத்திகளைக் அறியவும் இந்த பயன்பாடு உதவுகிறது.
For more Current Affairs in English and Tamil visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily tnpsc Current Affairs in Tamil and English on your Inbox.
Read tnpsc current affairs in Tamil and English. Download daily current affairs in Tamil for TNPSC and Monthly compilation of tnpsc current affairs in Tamil as PDF.[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Nov. 10, 2016"