fbpx
  • No products in the basket.

TNPSC Tamil Current Affairs June 12, 2017

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs June 12, 2017 (12/06/2017)

 

Download as PDF

தலைப்பு : சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்

மியான்மரில் கலடான் திட்டத்தை (Kaladan project) முடிக்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது

மிசோரம் எல்லைப் பகுதியில் உள்ள ஜொரின்புயிக்கு (Zorinpui) பாலீட்வா நதி (Paletwa River) முனையத்தை இணைக்கும் 109 கி.மீ. சாலை அமைக்கும் ஒப்பந்தம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் பருவமழை முடிந்த பிறகு இந்த திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி:

இந்தியா 2008 ம் ஆண்டு மிசோரத்தின் கலடான் திட்டத்திற்காக ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் கட்டுமானம் 2015 ஜூன்-ல் முடிக்க வேண்டும் என்ற ஒரு காலக்கெடுவுடன் 2010ல் ஜூன் மாதம் துவங்கியது.

ஆனால், இந்த பணிகளில் எந்தத் முடிவும் எட்டப்படவில்லை.

போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டமிடல் ஆகியவை இந்த தாமதத்திற்கு முக்கிய காரணங்களாக காணப்பட்டன.

கலடான் திட்டம் (Kaladan project):

மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தை இந்தியா-மியன்மார் எல்லையுடன் இணைப்பதே இந்த கலடான் திட்டமாகும்.

இந்த திட்டம் கிழக்கு துறைமுகங்களில் இருந்து மியன்மார் மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளுக்கு மியான்மார் வழியாக சரக்கு ஏற்றுமதிக்கு பல மாதிரி தளத்தை உருவாக்குவது ஆகும்.

மேலும் இது இந்தியா மற்றும் மியன்மார் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது.

இது வடகிழக்கு மாநிலங்களில் கடல் பாதைகளை திறந்து பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிக்கவும் மேலும் இந்தியா மற்றும் மியன்மார் இடையே பொருளாதார, வர்த்தக மற்றும் போர்திறஞ்சார்ந்த உறவுகளுக்கு மதிப்பு சேர்க்கவும் உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் கொல்கத்தாவில் இருந்து சிட்டிவிலிருந்து (Kolkata to Sittwe) சுமார் 1328 கிமீ தொலைவினை குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் சிக்கன் நெக் (Chicken’s Neck) என்றும் அறியப்படுகிற குறுகிய Siliguri நடைபாதையை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் தேவையை குறைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

_

தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்

ரபேல் நடால் 10 வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்

ஜெர்மனியின் ஸ்டான் வார்ரிக்காவை (Stan Wawrinka) தோற்கடித்தன் மூலம் ரபேல் நடால் (Rafael Nadal) பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் 18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கொண்டிருக்கும் ரோஜர் ஃபெடரருக்கு அடுத்த படியாக 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தனது வாழ்க்கையில் கொண்டிருக்கிறார்.

இந்த வெற்றியானது நடாலை உலகின் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் இரண்டாவது இடத்தை பிடிக்க வைத்தது.

ரபேல் நடால் தனது 10 வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி நடந்த இதே நிகழ்வில் வேறு எந்த வீரரும் இதுவரை 10 சாம்பியன்ஷிப் பட்டங்களை  வென்றதில்லை.

ரபேல் நடால் பற்றி:

அவர் ஜூன் 3, 1986 அன்று பிறந்தார் மற்றும் கிங் ஆப் கிலே – King of Clay என அழைக்கப்படுகிறார். அவர் ஸ்பானிய டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவார்.

2011 ஆம் ஆண்டில் ரஃபேல் நடால் ஆண்டின் லாரஸ் உலக சிறந்த விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

_

தலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, அரசுநலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

SATH திட்டம் தொடங்கப்பட்டது – NITI Aayog

NITI Aayog 2017 ஜூன் 10 ஆம் தேதி மாநில அரசுகளுக்கு மனித மூலதனத்தை மாற்றியமைப்பதற்கான நிலையான செயற்பாடு” (“Sustainable Action for Transforming Human capital) வழங்குவதற்கான SATH திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

NITI Aayog கல்வி மற்றும் சுகாதார துறைகளில் மாற்றத்தை கொண்டுவரும் ஒரு நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

மாநிலங்களை NITI Aayogல் இருந்து தொழில்நுட்ப ஆதரவு தேவையை வழங்கவும் தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.

_

தலைப்பு: இந்தியாவில் அரசியல் கட்சிகள், சமீபத்திய நாட்குறிப்புகள்

திரிபுரா CPI (M) தலைவர் ஜிதேந்திர சர்க்கார் பிஜேபியில் சேர்ந்தார்

திரிபுரா சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ஜிதேந்திர சர்க்கார் மற்றும் திரிபுரா பழங்குடி தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் அமர்வு உறுப்பினரான ஜோய் கிஷோர் ஜமியாட்டி பி.ஜே.பி ல் இணைந்தார்.

சில குறிப்புகள்:

CPI (M) தலைவர், திரு சர்கார் சட்டசபை தேர்தலில் ஆறு முறை வென்றுள்ளார்.2008 ல் CPI (M) ஐ மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக 2010 இல் காங்கிரஸில் சேர்ந்தார். அவர் மீண்டும் கடந்த ஆண்டு CPI (M)ல் சேர்ந்தார்.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

98 மில்லியன் வயதுடைய பிசின் வகையான அம்பரில் சிக்கிய சிறிய பறவை கண்டுபிடிக்கப்பட்டது

டைனோசர் சகாப்தத்தினை சேர்ந்த ஒரு சிறிய பறவையின் மிகவும் முழுமையான மாதிரியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த சிறு பறவை 98 மில்லியன் வயதுடைய அம்பரில் நன்கு பாதுகாக்கப்பட்ட இறகுகள், டால்ன்கள் மற்றும் பிற அம்சங்களுடன் உள்ளன.

முக்கிய குறிப்புகள்:

மியான்மரில் ஒரு சுரங்கத்தில் இருந்து அகழ்வாரையப்பட்ட இந்த சிறிய பறவையானது, ஒரு பிசின் வகையில் Enantiornithines என்றழைக்கப்படும் அழிந்து போன பறவையின் ஒரு குழுவின் மாதிரியினை கொண்டிருக்கிறது.

இந்த Enantiornithines, கிரந்தேசியஸ் (Cretaceous) காலத்தின் முடிவில் இறந்து விட்டது (சுமார் 145 மில்லியன் முதல் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு).

அம்பர் என்றால் என்ன?

அம்பர் என்பது புதிய கற்காலம் சார்ந்த படிம மரங்களின் ஒரு வகையான பிசின் ஆகும்.

இது இதன் நிறம் மற்றும் இயற்கை அழகுக்காக கொண்டாடப்பட்டு வருகிறது.

பழங்காலத்திலிருந்து நிகழ்காலம் வரை ஒரு ரத்தினமாக மதிப்பிடப்படுகிறது. மேலும் இது அலங்கார பொருள்களில் பல்வேறு வடிவங்களில் அம்பர் தயாரிக்கப்படுகிறது.

ஆம்பர் நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

_

தலைப்பு: விளையாட்டு மற்றும் பதக்கங்கள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குட்வால் தங்கம் வென்றார்

புனே பிரிவில் உள்ள ரயில்வே ஊழியரான ஷாசகந்த் குத்வால் (Shashikant Kutwal), ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 17 ஆவது உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஷஷிகாந்த் குத்வால் பற்றி:

புனே மாவட்டத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பாரமட்டி தாலுகா குட்வால் அவர்களின் சொந்த ஊர் ஆகும்.

2000 ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை மூலம் மத்திய ரயில்வேயில் குட்வால் நியமிக்கப்பட்டார்.

பின்னர் அவர் பல்வேறு செஸ் போட்டிகளில் மத்திய இரயில்வே, இந்திய இரயில்வே மற்றும் இந்தியா ஆகியவற்றை குறிக்கும் வகையில் விளையாடி வருகிறார்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

0 responses on "TNPSC Tamil Current Affairs June 12, 2017"

Leave a Message

Your email address will not be published. Required fields are marked *

© TNPSC.Academy | All Rights Reserved.

CRACK TNPSC

with Best Online Class & Tests

Winner