
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs MAR 22, 2017 (22/03/2017)
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்
மேஜர் ரோஹித் சூரிக்கு கீர்த்தி சக்ரா
இந்திய அரசால் மேஜர் ரோஹித் சூரிக்கு (Rohit Suri) ராணுவத்தில் அவர் வீரத்துடன் செயல்பட்டமைக்காக கீர்த்தி சக்ரா (Kirthi Chakra) வழங்கப்பட்டது.
கிழக்கு இராணுவ தளபதி சீனியர் லெப்டினன்ட் ஜெனரல் பிரவீண் பக்ஷி (Praveen Bakshi) அவர்களுக்கு நாட்டின் உயர்ந்த சேவைக்காக பரம் விஷிஷித் சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal) வழங்கப்பட்டது.
இராணுவத்தில் பல்வேறு போர்களில் உதவிய மற்றொரு நபரான Nb சப் விஜய் குமார் அவர்களுக்கு ஷவுர்யா சக்ரா (Shaurya Chakra) வழங்கப்பட்டது.
கீர்த்தி சக்ரா பற்றி:
அது இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்காலத்திலான கேலன்டிரி விருது ஆகும்.
மேலும் இது அசோக் சக்ராவிற்கு பிறகு மற்றும் ஷவுர்யா சக்ராவிற்கு முன்னும் உள்ள விருது ஆகும்.
1967 முன், இவ் விருது அசோகா சக்ரா வகுப்பு II என அறியப்பட்டது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக கவிதைகள் நாள்
1999 ல் மார்ச் 21 ம் தேதி உலக கவிதைகள் நாள் என யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) வினால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கவிதைகளை வாசித்தல், எழுதுதல், பதிப்பித்தல் மற்றும் கவிதை கற்பித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக வனவியல் நாள் (World Forestry Day)
உலக வனவியல் தினம் அல்லது வனத்துறை சர்வதேச தினம் மார்ச் 21 அன்று ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
சமூகங்கள் மத்தியில் பொது விழிப்புணர்வினை அதிகரிக்கும் பொருட்டும் காடுகளின் மதிப்புகள் மற்றும் அதன் பங்களிப்புகளை பற்றிய முக்கியத்துவத்தினை உணர்த்தும் பொருட்டும் பூமியில் வாழ்க்கை சுழற்சி சமப்படுத்தவும் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
உலக வனவியல் நாள் 2017 க்கான கருப்பொருள் “வனத்துறை மற்றும் ஆற்றல்” ஆகும்.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக நீர் நாள்
வளரும் நாடுகளில் சுத்தம் செய்த தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதரத்தில் வசதிகள் போன்றவற்றில் உலகளாவிய அணுகலின் முக்கியத்துவத்தின் மேல் கவனம் செலுத்த மார்ச் 22 அன்று உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
2017ம் ஆண்டின் கருப்பொருள் : “நீரை ஏன் வீணடிக்க வேண்டும்?”.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்
நவ்ரூஸ் (Nowruz) – ஈரானின் புது வருட பிறப்பு
நவ்ரூஸ், மேலும் Navroz என்று உச்சரிக்கப்படுகிற ஈரானின் புது வருட பிறப்பு மார்ச் 21 ம் தேதி ஈரானிய மக்கள் மூலம் கொண்டாடப்படுகிறது.
Zoroastrianism யை பின்பற்றும் இந்தியாவின் பார்சிகள் சமூகம் இப்புத்தாண்டை முழு சந்தோஷங்களுடன் கொண்டாடுகின்றனர்.
இந்தியாவில் மும்பை மற்றும் குஜராத் ஆகிய இடங்களில் இன்னும் இருக்கும் பார்சி சமுதாய மக்கள் Navroz பண்டிகையைக் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.
தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் சாதனைகள்
பெண்கள் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் – வித்யா பிள்ளை வெள்ளி வென்றார்
இந்தியாவின் வித்யா பிள்ளை அவர்கள், சிங்கப்பூரில் நடைபெற்ற உலக பெண்கள் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
ஹாங்காங்கின் Ng On Yee தங்கப்பதக்கம் வென்றார்.
வித்யா பிள்ளை பற்றி:
திருச்சியில் பிறந்து சென்னை வளர்ந்த வித்யா பிள்ளை அவர்கள், ஸ்னூக்கர் விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு தொழில்முறை ஆட்டக்காரராக இருக்கிறார்.
இவ்விளையாட்டில் அவரின் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக கர்நாடக அரசு அவருக்கு 2016ல் Ekalavya விருது அளித்து பெருமைப்படுத்தியது.
அவர் ஒன்பது முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றிருக்கிறார்.
அவர் இந்தியாவில் சிறந்த பெண் ஸ்னூக்கர் ஆட்டக்காரராக போற்றப்படுகிறார்.
_
தலைப்பு : வரலாறு – உலக அமைப்புக்கள், சமீபத்திய நிகழ்வுகள்
மனித வளர்ச்சி குறியீட்டு எண் 2016
UNDP மூலம் 2016 ஆண்டின் மனித அபிவிருத்தி அறிக்கை வெளியிடப்பட்டது.
மனித அபிவிருத்தி சுட்டெண்ணும் அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.
இந்தியாவின் அறிக்கை:
188 நாடுகளிடையே இந்தியா 130ல் இருந்து 131வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
“அதிக மனித வளர்ச்சி” என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலுள்ள இலங்கை (73) மற்றும் மாலத்தீவு (105) நாடுகளுக்கு பின்னால் சார்க் நாடுகளிடையே மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் மனித வளர்ச்சி சுட்டெண் மதிப்பு, 1990 இல் 0.428 இருந்து 2015 ஆம் ஆண்டில் 0.624 க்கு அதிகரித்துள்ளது என்ற போதிலும் BRIC நாடுகள் மத்தியில் இன்னும் குறைந்த இடத்தையே பிடித்துள்ளது.
எனினும், மனித வளர்ச்சி சுட்டெண் மதிப்பின் சராசரி ஆண்டு வளர்ச்சி (1990-2015) மற்ற நடுத்தர நாடுகளின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாகவே உள்ளது.
மனித வளர்ச்சிச் சுட்டெண் பற்றி:
மனித வளர்ச்சிச் சுட்டெண் ஆனது மனித வளர்ச்சியின் முன்னேற்றத்தினை மூன்று பரிமாணங்களில் மதிப்பிடுவதை அடிப்படையாக கொண்டது.
முதலாவதாக, மக்கள் தொகையில் ஆயுள் காலத்தை பொறுத்து ஒரு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அடிப்டையாகக் கொண்டு அளவிடப்படுகிறது.
இரண்டாவதாக, இளம் வயதினர் மத்தியில் கல்வியறிவினை கணக்கிட்டு அளவிடப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கு கற்றல் மற்றும் கல்வி அணுகல் மதிப்பினை வைத்தும் சராசரியாக அளவிடப்படுகிறது.
கடைசியாக நாட்டின் தலா வருமான மொத்த தேசிய வருமானம் (GNI) மூலம் வாழ்க்கைத் தரத்தை வைத்து அளவிடப்படுகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL Current Affairs MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs MAR and inEnglish on your Inbox.
Read TNPSC TAMIL Current Affairs MAR and in English. Download daily TNPSC TAMIL Current Affairs MAR and in English.
Monthly compilation of TNPSC TAMIL Current Affairs MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC TAMIL Current Affairs MAR 22, 2017"