
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs MAR 23, 2017 (23/03/2017)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
இலவச மற்றும் கட்டாய கல்வி (கல்வி உரிமைச்) சட்டம், 2009 திருத்தம்
மத்திய அமைச்சரவை இலவச மற்றும் கட்டாய கல்வி (கல்வி உரிமைச்) சட்டம், 2009ன் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இந்த திருத்தங்களின் படி, 31 மார்ச், 2015 நிலமைப்படி அனைத்து ஆசிரியர்களும் கல்விசார் அதிகாரத்தில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் பணிக்காலத்தை நீட்டிப்பதற்க்காக மார்ச் 31, 2019 வரை நான்கு ஆண்டுகள் பயிற்சிக்காலம் எடுக்கவேண்டும் என அறிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் குறைந்தபட்ச தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் என அவசியமாகக் கருதப்பட்டது போன்ற நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் தரத்தை பராமரிக்க உறுதி அளிக்கிறது.
இந்த முறையில், ஆசிரியர்கள் ஒட்டுமொத்த தரத்தில் மேம்பாடு காணப்படுதல், கற்பித்தல் செயல்முறைகள் மற்றும் அதன் விளைவாக குழந்தைகள் கற்றல் போன்ற நல்ல விளைவுகளை விளைவிக்கக்கூடியது.
தொடக்க கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான அரசு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தினையும் இது வலுப்படுத்தும்.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக வானிலை நாள் – மார்ச் 23
உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள உலகளாவிய வானிலை ஆய்வு சமூகத்தினர் 23 மார்ச் அன்று உலக வானிலை தினத்தினை கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு உலக வானிலை தின கருப்பொருள் : “மேகங்களை புரிந்து கொள்ளுதல்”.
இது வானிலை காலநிலை மற்றும் தண்ணீர் போன்றவற்றிற்கு காரணமான மேகங்களின் மகத்தான முக்கியத்துவத்தை காட்டுகிறது.
_
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்
குல்தீப் நாயர் இதழியல் விருதுகள் 2017 – Kuldip Nayar Journalism Awards
தொலைக் காட்சி பத்திரிகையாளரான ரவீஷ் குமார் (Ravish Kumar) அவர்களுக்கு முதல் குல்தீப் நாயர் இதழியல் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
ரூ 1 லட்சம் ரொக்கப்பரிசுடன் சேர்த்து ஒரு விருது பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.
காந்தி அமைதி அறக்கட்டளை மூலம் இந்திய சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பழம்பெரும் பத்திரிகையாளர் குல்தீப் நாயர் மூலம் அவர் பெயரில் இந்த விருது ரவீஷ் குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
குல்தீப் நாயர் பற்றி:
குல்தீப் நாயர் பிறந்தது 14 ஆகஸ்ட்டு 1923ல் ஆகும்.
இவர் இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர், ஆட்சிக்குழு கட்டுரையாளர், மனித உரிமை ஆர்வலர், ஆசிரியர் மற்றும் இந்திய ஐக்கிய ராஜ்யத்தின் முன்னாள் உயர் ஆணையர் ஆவார்.
இடதுசாரி அரசியல் விமர்சகராக இருந்தது அவரது நீண்ட வாழ்க்கை பயணத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது.
1997 இல் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் உறுப்பினராக அவர் பரிந்துரைக்கப்பட்டார்.
_
தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
ISSF துப்பாக்கிசுடுதல் உலக கோப்பை – அங்கூர் மிட்டல் டபுள் ட்ராப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்
ISSF துப்பாக்கிசுடுதல் உலக கோப்பையில் அங்கூர் மிட்டல் (Ankur Mittal) டபுள் ட்ராப் பிரிவில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் வில்லெட்டை (James Willet) தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) உலக கோப்பையில் மிட்டல் ஏற்கனவே வெள்ளி வென்றிருந்தார்.
அதே போட்டியில் வில்லெட் தங்கம் வென்றிருந்தார்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC TAMIL Current Affairs MAR and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs MAR and inEnglish on your Inbox.
Read TNPSC TAMIL Current Affairs MAR and in English. Download daily TNPSC TAMIL Current Affairs MAR and in English.
Monthly compilation of TNPSC TAMIL Current Affairs MAR and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "TNPSC TAMIL Current Affairs MAR 23, 2017"