
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs November 08, 2017 (08/11/2017)
தலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நாட்குறிப்புகள், மாநிலங்களின் சுயவிவரம்
SHe – Box ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பு
பணியிடத்தில் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் அதன் குறித்த செயல்பாடுகளை உறுதி செய்வதற்கு (தடுப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் குறைப்பு) சட்டம் (SH சட்டம்), 2013 அடிப்படையில் மத்திய அரசாங்கம் ஒரு விரிவான SHe – Box என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அது என்ன?
இது பொது மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புகார்களை பதிவு செய்ய அமைக்கப்பட்ட ஒரு ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பு ஆகும்.
அது எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு புகார் போர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், இது நேரடியாக சம்பந்தப்பட்ட முதலாளிகளின் ICC / LCC க்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த இணையதளத்தின் மூலம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மற்றும் புகார் அளிப்பவர் ICC / LCC நடத்திய விசாரணையின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.
_
தலைப்பு : தேசம், பாதுகாப்பு செயல்பாடுகள், சமீபத்திய நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
நிர்பாய் ஏவுகணை சோதனை வெற்றி
300 கிலோ வெடிப்பெருளை சுமந்து செல்லும் நிர்பாய் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சமீபத்தில் DRDO நடத்தியது.
ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் (ஐடிஆர்), சந்திபூர், ஒடிசா இடத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
NIRBHAY ஏவுகணை பற்றி:
இது இந்தியாவின் முதல் தனித்தன்மையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கிய நீண்ட ரேஞ்ச் சப்-சோனிக் குரூஸ் ஏவுகலமாகும், இது பல தளங்களில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.
_
தலைப்பு : உடல்நலம் & அறிவியலில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் புதிய எறும்பு இனங்கள்
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரு புதிய வகை எறும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்,
இவை உயிரியல் பல்வகைமையின் உலகின் ‘வெப்பமான வெப்பப்பகுதிகளில்’ ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
புதிய இனங்கள் டைரன்நைரோமேக்ஸ் அலீ (Tyrannomyrmex alii) (அல்லது டி. அலீ) என்றழைக்கப்படுகின்றன.
இவை புகழ்பெற்ற மிர்மோகலாஜிஸ்ட் “எறும்பு மனிதன்” என்றழைக்கப்படும் முஸ்தாக் அலி, அவர்களின் பெயரின் அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ளன.
இந்த புதிய இனங்கள் பெரியார் புலிகள் சரணாலயத்தில் காணப்படுகின்றன.
_
தலைப்பு : உடல்நலம் & அறிவியல் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
மூசா பாரிஜீதியானா – Musa paramjitiana
Musa paramjitiana என்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காட்டு வாழைப்பழ இனமாகும்.
முக்கிய குறிப்புகள்:
இது தீவுகளில் இரு இடங்களில் மட்டுமே இதுவரை காணப்பட்டதால், அதன் பாதுகாப்பு நிலை ‘கடுமையான ஆபத்தானது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஒவ்வொன்றும் 6 முதல் 18 செடிகள் வரை வளரும். இதன் பழங்கள் மற்றும் விதைகள் இன-மருத்துவ முக்கியத்துவம் கொண்டவை.
_
தலைப்பு: விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
மேரி கோம் – ஆசிய கூட்டமைப்பு பெண்கள் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் தங்கம்
வியட்நாம்-ன் ஹோ சி மின் நகரில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் லைட் ஃப்ளைவெயிட் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
முக்கிய குறிப்புகள்:
மேரி கோம் வட கொரியாவின் கிம் ஹைங் மியை இறுதிப் போட்டியில் தோற்கடித்தார்.
மேலும் லைட் ஃப்ளைவெயிட் பிரிவில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அவர் இந்த தங்கப் பதக்கத்தை வென்றது (48 கிலோ பிரிவு) குறிப்பிடத்தக்கது.
ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்-ல் மேரி கோமின் ஆறாவது பதக்கம் இதுவாகும்.
இந்த போட்டியில் முந்தைய பதிப்பில் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
_
தலைப்பு: சமீபத்திய நிகழ்வுகள்
பன்னாட்டுக் கதிரியல் நாள் – நவம்பர் 08
பன்னாட்டுக் கதிரியல் நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
எக்சு-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது.
கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், செய்தி நபர்கள், இந்திய வெளியுறவு கொள்கைகள்
வேல்ஸ் நாட்டின் இளவரசர் சார்லஸ் 2 நாள் பயணம் இந்தியா
வேல்ஸ் நாட்டின் இளவரசர், சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜ் இந்தியாவிற்கு 2 நாள் பயணமாக புது டெல்லியில் வருகை புரிந்துள்ளார்.
இந்த வருகையானது இந்தியாவின் இளவரசரின் 9 வது வருகையாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இந்த வருகையின் நோக்கமாகும்.
_
[adinserter block=”2″]
தலைப்பு: சமீபத்திய நாட்குறிப்புகள் நிகழ்வுகள், உலக அமைப்புகள்
யுனெஸ்கோ படைப்பாற்றல் மிக்க நகரங்கள் வலையத்தில் சென்னை சேர்க்கப்பட்டது
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) படைப்பாற்றல் மிக்க நகரங்கள் வலையத்தில் சென்னை நகரம் சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசிக்குப் பின்னர் யுனெஸ்கோவின் ஆக்கப்பூர்வமான நகரங்களின் பட்டியலில் சென்னை மூன்றாவது இந்திய நகரமாக உள்ளது.
0 responses on "TNPSC Tamil Current Affairs November 08, 2017"