
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs November 13, 2017 (13/11/2017)
தலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள்
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI)
பிலிப்பைன்ஸில் லாஸ் பானோஸின் IRRI இல் பிரதமர் மோடியின் பெயரில் ஒரு ‘அரிசி வயல் ஆய்வக’-த்தினை சமீபத்தில் பிரதம மந்திரி துவக்கி வைத்தார்.
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) என்றால் என்ன?
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஆர்ஆர்ஐ) ஆனது ஒரு சர்வதேச விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகும்.
அது 1960 களில் பசுமை புரட்சிக்கான பங்களிப்பை அளித்த அரிசி வகைகளை வளர்த்ததில் அதன் பணிக்காக அறியப்படுகிறது.
இதன் நோக்கம்:
1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிறுவனம் ஆனது வறுமை மற்றும் பசி ஆகியவற்றை குறைக்கவும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனை மேம்படுத்துதல் பணிக்காகவும் மற்றும் விவசாய சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை தனது நோக்கமாக கொண்டுள்ளது.
CGIAR:
IRRI உலகில் உள்ள 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும்.
இது சர்வதேச விவசாய ஆராய்ச்சி மையங்களின் CGIAR கூட்டமைப்பு அமைத்து உணவு பாதுகாப்பு பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டமைப்பு ஆகும்.
இது ஆசியாவில் மிகப்பெரிய இலாப நோக்கற்ற விவசாய ஆராய்ச்சி மையங்கள் ஆகும்.
இந்தியா மற்றும் IRRI:
IRRI ஆனது இந்திய விவசாய கழகத்துடன் (ICAR) ஒத்துழைத்து இந்தியாவில் வறட்சி தாங்ககூடிய வெள்ளத்தில் வாழக்கூடிய மற்றும் உப்பு சகிப்புத்தன்மை கொண்ட அரிசி வகைகளை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரதமர் தொகுதியான வாரணாசியில் IRRI பிராந்திய மையத்தை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
இதில் உயர் விளைச்சல் தரும் அரிசி வகைகளை உருவாக்குவது நோக்கமாக உள்ளது.
வாரணாசி மையம் ஆனது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவவும் அரிசி உற்பத்தித்திறன் மேம்படுத்துதல் மற்றும் ஆதரவு அளித்தல், உற்பத்தி செலவினங்களைக் குறைத்தல், மதிப்பு கூட்டுதல், பல்வகைப்படுத்தல் மற்றும் விவசாயிகளின் திறன்களை விரிவாக்குதல் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்டுள்ளது.
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
ஹவுசாலா 2017
ஹவுசாலா என்பது குழந்தைகள் உரிமைகள் வாரம் நவம்பர் 16 முதல் 20 நவம்பர் வரை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது.
இதன் பின்னணி:
நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது மற்றும் சர்வதேச குழந்தை உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் 20 நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடையே உள்ள இடைப்பட்டகாலம் குழந்தை உரிமைகள் வாரமாக WCD அமைச்சகம் மூலம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் (CCIs) வசிக்கின்ற குழந்தைகளுக்கு CCI விழாவினை வழங்கி கொண்டாடுகிறது.
_
தலைப்பு : உடல்நலம் & அறிவியல் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்
Cobots
சிறிய, ஒத்துழைப்பு ரோபோக்கள் அல்லது கோபாட்கள் எனப்படும் ரோபோட்டுக்கள் உலகம் முழுவதும் அதிகளவில் மதிப்பை பெற்றுள்ளன.
மேலும் இந்தியாவிலும் அவை நன்மதிப்பை பெற்றுள்ளன.
பல நிறுவனங்கள், பஜாஜ் ஆட்டோ அல்லது அரோலாக் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள் கோபட்டுகளின் பயன்பாடுகள் மூலம் பயனடைந்திருக்கின்றன.
மேலும் பல நிறுவனங்கள் தங்களது கடைகளுக்கு இதனை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
கோபோட் என்றால் என்ன?
ஒரு கோபட், மனிதர்களுடன் இணைந்து பணிபுரிய பணியிடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தன்னியக்கமாக அல்லது வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ரோபோக்களுக்கு மாறாக உள்ளது.
தொழிலாளர்கள் தனது வேலைப்பளுவை குறைப்பதற்கு இது நிவாரணமாக இருக்கும்.
அவைகள் எவ்வாறு செயல்படுகிறது? உதாரணங்கள்
ஒரு கார்த் தொழிற்சாலையில், கோபாட் நட்டுகளை இறுக்கிக் கொண்டிருக்கும் போது, தொழிலாளி கோபாட்டின் முன் கருவிகளை வைத்து இணைந்து செயல்படுவர்.
ஒரு பிஸ்கட் ஆலைகளில், கோபட் பிஸ்கட் தொகுப்பை தொகுக்கும்பொழுது நுகர்வோர்களுக்கு பயன்படாத பிஸ்கேட்க்களை தொழிலாளி அகற்றிவிடுகிறார்.
சிறிய அளவிலான தொழிலில், கோபட் ட்ரில்லிங் தொழிலில் பயன்படுத்தும்பொழுது தொழிலாளி அதன் தரமான வேலையை மேற்பார்வையிட உதவிடுகிறார்.
_
தலைப்பு : மாநிலங்களின் சுயவிவரம், புதிய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்
தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாம் அதிகாரப்பூர்வ மொழியாக உருது
தெலுங்கானா அரசாங்கம் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது.
அடுத்த 60 நாட்களில் அனைத்து அலுவலகங்களிலும் மாநில அரசு உருது அதிகாரிகளை நியமனம் செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, உருது மொழியில் பதில் சொல்ல இருக்கிறது.
இதற்க்கு அரசியலமைப்பின் பதில் என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டமானது, மாநிலங்களால் பயன்படுத்தப்படும் அதிகாரபூர்வ மொழிகளில் எந்த மொழியினையும் கோடிட்டு குறிப்பிடவில்லை.
இதற்கு ஒவ்வொரு மாநிலத்தையும் அதன் சட்டமன்றத்திலிருந்தும், இந்த பிராந்தியத்தில் உள்ள ஹிந்தி அல்லது எந்த மொழியையும் பயன்படுத்த அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்த அதிகாரமளித்துள்ளது.
எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் அல்லாதவற்றையும் பல மாநிலங்கள் அதிகாரப்பூர்வ மொழிகளால் ஏற்றுக் கொண்டுள்ளன.
_
தலைப்பு : புதிய நியமனங்கள்
யுனெஸ்கோவின் புதிய இயக்குனர்
ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) புதிய தலைமை இயக்குநராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆத்ரே அஜூலே (Audrey Azoulay) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யுனெஸ்கோ:
யுனெஸ்கோ என்பது உலகளாவிய வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களை பாதுகாக்க உதவுகிறது.
இது 1945 இல் உருவானது மற்றும் பிரான்சினில் தனது அடிப்படையினை கொண்ட பல்-நாடு நிறுவனம் ஆகும்.
யுனெஸ்கோ அதன் முக்கிய குறிக்கோள்களை ஐந்து பிரதான வேலைத்திட்டங்களால் தொடர்கிறது: அவையாவன கல்வி, இயற்கை அறிவியல், சமூக / மனித அறிவியல், கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு / தகவல்.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
பங்கஜ் அத்வானி 17 வது உலக பட்டத்தை வென்றார்
2017ல் டோகா, கத்தார் நாட்டில் நடைபெற்ற IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி தனது 17 வது உலக பட்டத்தை வென்றுள்ளார்.
பங்கஜ் அத்வானி இங்கிலாந்தின் மைக் ரஸ்ஸலை தோற்கடித்ததன் மூலம் இப்பட்டத்தை வென்றார்.
மேலும் IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் வென்ற இப்பட்டம் அவரது 17 வது உலக பட்டத்தை குறிக்கும்.
_
[adinserter block=”2″]
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
உலக கருணை நாள் – நவம்பர் 13
2017 நவம்பர் மாதம் 13 ஆம் தேதி உலகின் பல்வேறு பகுதிகளிலும் உலக கருணை தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 அன்று உலக கருணை நாள் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.
இது 1998 இல் உலக கருணை இயக்கம் மூலம் தேசத்தின் தயவில் உள்ள அரசு சாரா அமைப்புகளின் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகளாவிய இந்த தினத்தின் நோக்கம் ஆனது சமூகத்தில் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதாகும்.
மேலும் நேர்மறை சக்தியையும், நம்மை பிணைக்கும் இரக்கத்தின் பொது நூல் பற்றியும் கவனம் செலுத்துகிறது.
0 responses on "TNPSC Tamil Current Affairs November 13, 2017"